செய்திகள் :

`பாபா' கடைப் பெயர் சர்ச்சை; இஸ்லாமியருக்கு ஆதரவாக நின்ற `முகமது தீபக்' - வெடித்த போராட்டம், பதற்றம்!

post image

முஸ்லிம் கடைக்கு `பாபா' பெயர்

உத்தரப்பிரதேசத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதனை மதரீதியாக பிரித்து பார்ப்பது வழக்கமாக மாறி இருக்கிறது. அங்குள்ள கோட்வார் என்ற நகரில் வசிக்கும் மொகமத் சோயப் என்பவர் பாபா என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வந்தார். இதற்கு உள்ளூர் பஜ்ரங் தள அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதே நகரில் இருக்கும் பிரபலமான சித்தபலி பாபா ஹனுமான் கோயிலை பிாதிபலிக்கும் வகையில் மொகமத் சோயப் தனது கடைக்கு பாபா என்று பெயர் வைத்திருப்பதாகவும், முஸ்லிம் பிரமுகர் ஒருவர் இது போன்ற பெயரில் கடை வைத்திருப்பது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி, கடையின் பெயரை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

கடையை வேறு இடத்திற்கு மாற்ற இருப்பதாகவும், கடையை வேறு இடத்திற்கு மாற்றியதும் கடையின் பெயரையும் மாற்றி விடுவதாக மொகமத் சோயப் உறுதியளித்தார். இதையடுத்து பஜ்ரங் தள உறுப்பினர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். சோயப் கடந்த மாத மத்தியில் தனது கடையை சிறிது தூரத்திற்கு மாற்றி வைத்தார்.

ஆனால் சொன்னபடி கடை பெயரை மாற்றாமல் தொடர்ந்து பாபா என்ற பெயரில் கடையை திறந்தார். இதனால் பஜ்ரங் தளத்தினர் மீண்டும் கடை முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் கைகலப்பாக மாறியது.

தீபக் குமார்.... மொகமத் தீபக்

கடந்த 28-ம் தேதி பஜ்ரங் தளத்தினரும், சோயப் ஆதரவாளர்களும் கடை முன்பு மோதிக்கொண்டனர். மோதலின் போது உடனிருந்தவர்களில் ஜிம் உரிமையாளரான தீபக் குமார் கலவரத்தை தடுக்க முயன்றார். அவர் போராட்டக்காரர்களிடம் போராட காரணம் கேட்டு வாக்குவாதம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. சோயப் கடை பெயருக்கு எதிராகப் போராடியவர்கள் தீபக் குமாரிடம், `நீ என்ன மதம்?' என்று கேள்வி எழுப்பினர். உடனே அவர் தனது பெயர் `மொகமத் தீபக்' என்று தெரிவித்தார். அவரின் இப்பதிலும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது.

பெயரை மாற்றிக்கொண்டது குறித்து தீபக் குமார் கூறுகையில், ''நான் இந்து, என் மதத்தில் பெருமை கொள்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் இந்தியன். ஒருவரையொருவர் எதிரிகளாகக் கருதினால், இந்த நாடு எப்படி முன்னேறும்?" என்று கேள்வி எழுப்பினார்.

கடையின் பெயர் பிரச்னை பின்னுக்குத் தள்ளப்பட்டு தீபக் தனது பெயரை மொகமத் தீபக் என்று மாற்றிக்கொண்டது சமூக வலைதளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. சிலர் அவரை வகுப்புவாத எதிர்ப்பின் அடையாளம் என்று தெரிவித்தனர். மற்றவர்கள் வேண்டுமென்றே தீபக் மத உணர்வுகளைத் தூண்டுவதாக குற்றம்சாட்டினர்.

கடந்த 31ம் தேதி மீண்டும் பதற்றம் அதிகரித்தது. கோட்வாருக்கு வெளியில் இருந்து வந்த சிலர் உட்பட ஏராளமானோர் சோயப்பின் கடைக்கு வெளியே கூடினர். அவர்கள் தீபக் இணையத்தில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். போலீஸார் விரைந்து வந்து வன்முறை ஏற்படவிடாமல் தடுத்தனர். மேலும் இரு தரப்பினரையும் அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதில் சோயப் கடை தொடர்ந்து பாபா பெயரில் செயல்படும்.

மேற்கொண்டு யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என்று போலீஸார் எச்சரித்தனர். மேலும் சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கதை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். போலீஸ் அதிகாரி சந்திரமோகன் இது குறித்து கூறுகையில், ``தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் அமைதியை நிலைநாட்டவும், சர்ச்சைகள் தலைதூக்காமல் தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து வருகிறது'' என்று கூறினார்.

போலீஸார் இச்சம்பவங்கள் குறித்து 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் இரண்டு வழக்கு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், ஒரு வழக்கு தீபக் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறை பரவுவதை தடுக்க கோட்வார் முழுவதும் போலீஸார் கொடி அணிவகுப்புகளை நடத்தினர். முக்கிய இடங்களில் அதிக அளவில் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகரத்தின் நுழைவுவாயில்களில் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையில் இப்பிரச்னைகளால் தீபக்கின் உடற்பயிற்சி கூடம் கடந்த பல நாள்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் தீபக்கிற்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மாத வாடகை மட்டும் ரூ.50,000 வரை செலுத்த வேண்டும். மேலும் தீபக் மற்றும் அவரது மனைவி, தாய் மற்றும் இளம் மகள் உட்பட அவரது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் தீபக் அச்சம் அடைந்துள்ளார்.

3 உயிர்களைக் குடித்த கொரிய மோகம்; தந்தையின் மிரட்டல்.. முடிவுரை எழுதிய கேம்?- அதிர்ச்சிகர தகவல்கள்!

டெல்லி அருகில் உள்ள காஜியாபாத்தில் நேற்று காலை சகோதரிகளான நிஷிகா(16), பிராச்சி(14), பாகி(12) ஆகியோர் தாங்கள் வசித்து வந்த குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர... மேலும் பார்க்க

மும்பை டேங்கர் லாரி விபத்து; 12 மணி நேரம் 22 கிமீ தூரம் நின்ற 30 ஆயிரம் லாரிகள்; அரசு பஸ்கள் ரத்து

மும்பை-புனே நெடுஞ்சாலை பொதுவாகவே எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். மும்பையில் இருந்து புனே செல்ல 3 மணி நேரம் பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் நெடுஞ்சாலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பயண நேரம் அதிகரிக... மேலும் பார்க்க

`எங்களால் விடமுடியாது'- கொரிய விளையாட்டுக்கு அடிமை; 9வது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்த சேதன் குமாரின் என்பவரின் மகள்கள் விஷிகா (16), பிராச்சி (14), பாகி(12). இவர்கள் மூவரும் எதைச் செய்தாலும் ஒன்றாகத்தான் செய்வார்கள். மூன்று பேரும் கொரிய ஆன்ல... மேலும் பார்க்க

மைதானத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜப்பானிய கைப்பந்து நட்சத்திரம்! - வைரல் வீடியோ பின்னணி

விளையாட்டு உலகில் வெற்றிகளையும் பதக்கங்களையும் போல, ஒரு வீரரின் நற்பண்புகளும் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். அந்த வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரப் கைபந்து விளையாட்டு வீரர் யூஜி ... மேலும் பார்க்க

`இந்திய சட்டத்தை பின்பற்றாவிடில் இங்கிருந்து வெளியேறுங்கள்' - வாட்ஸ்அப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிர்வாகம் தனக்கென தனியுரிமைக் கொள்கையை வகுத்துள்ளது. இக்கொள்கையின் அடிப்படையில் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு வாட்ஸ்அப் நிர்வாகம... மேலும் பார்க்க

Rajinikanth : 'தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா...' - நெகிழும் பத்மா!

தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளரை பத்மா நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அழைத்துப் பேசி பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.குடும்பத்த... மேலும் பார்க்க