செய்திகள் :

'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' - அண்ணாமலை பரபரப்பு விளக்கம்

post image

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி கோவை வருகிறார். அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது.

அண்ணாமலை

இதில் தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும். சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து, குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாக நிர்வகிப்பதில்லை. கோவை மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் காவல்துறை கோட்டை விட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது தொடர்பாக விமர்சிக்கிறார்கள். நான் முறையாக தொழில் செய்கிறேன். எந்த தொழிலையும் செய்வதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. நியாயமான வழியில் சம்பாதித்து அதில் அரசியல் செய்கிறேன். ஆரோக்கியமாக சம்பாதியுங்கள் என்று தான் இளைஞர்களிடம் கூறிக் கொண்டிருக்கிறேன். எனக்கு தொழில் தொடங்க ரூ.5 லட்சம் முதலீடு போதும்.

அண்ணாமலை
அண்ணாமலை

என்னுடைய விவசாயம், என்னுடைய தொழில் செய்கிறேன். என் குழந்தைகளின் படிப்பு, உணவுக்காக நான் தொழில் செய்கிறேன். செய்யக்கூடிய வேலைகளில் தவறு இருந்தால் சொல்லுங்கள். நான் மாநில தலைவராக உள்ளேன். எனக்கு ஓடுவதற்கு நேரம் இருப்பதால் செய்கிறேன். நான் தொழில் செய்தால் தான் சாப்பிட முடியும்.

என் தேவைகளுக்கு பிச்சையா எடுக்க முடியும். அதற்கு தொழில் செய்தால் தான் முடியும். பெருமையாக இன்னும் நிறைய தொழில் ஆரம்பிப்பேன். எதையும் செய்யாமல் வீட்டில் கையை கட்டிக் கொண்டு உட்கார வேண்டுமா. நான் சாராய ஆலை நடத்தவில்லை. முதலமைச்சர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரே சொல்லட்டும். டி.ஆர். பாலு வந்த கார் ஒரு சாராய ஆலையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டி.ஆர் பாலு கண்டனம்
டி.ஆர் பாலு

தமிழ்நாடு தேர்தல் களம் இன்னும் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. டிசம்பர், ஜனவரியில் கூட்டணி விவரம் தெரியும். காரணம் காட்டி டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாதவர் போல தெரியவில்லை. டி.ஆர். பாலு உங்களை ஏமாற்றிவிட்டார் என்று நீதிபதியிடம் கூறுவேன்.” என்றார்.

நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன?

அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்... மேலும் பார்க்க

``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன்" - பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் (முதற்கட்டம் நவ., 6, இரண்டாம் கட்டம் நவ., 11) முடிந்துவிட்ட நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது.243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் ஆ... மேலும் பார்க்க

DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!' அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை

'கதை கேளு... கதை கேளு... ஒரு கதை சொல்றோம் கேளு!' என பறையடித்தபடி ஒரு கருஞ்சட்டை குழு மேடையேறுகிறது. சிவப்புத் துண்டை தோளில் போர்த்திய ஒரு பெண்மணி, 'கட்சின்னா என்னன்னு தெரியுமா?' எனக் கேட்கிறார். காவி ... மேலும் பார்க்க

'என்னை தாக்க முயன்ற முக்கிய குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள' -எம்.எல்.ஏ., அருள் பேட்டி

பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A ஃபார்ம், B ஃபார்ம் கையெழுத்திடுவது நான்தான் என்று... மேலும் பார்க்க

வந்தே மாதரம் 150 : அரிச்சல்முனையில் NCC மாணவர்கள், ராணுவ வீரர்களுடன் தேசியக்கொடி ஏந்தி மரியாதை!

வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மா... மேலும் பார்க்க

தமிழிசை: "விஜய்க்கு இந்த புத்தகத்தை அனுப்பியிருக்கிறேன்" - SIR விவகராத்தில் விளக்கம்

முன்னாள் ஆளுநரும் தமிழக பா.ஜ.க -வின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (நவ. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரலெழுப்புவது தேவையற்றது என்ற... மேலும் பார்க்க