செய்திகள் :

புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டுகள் சிறை தண்டனை! - நீதிமன்றத் தீர்ப்பும், பின்னணியும்

post image

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரௌடி பாம் எழில் (எ) எழிலரசன் மீது கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பெயின்ட்டர் தொழில் செய்பவரான இவர், கடந்த 2023-ம் ஆண்டு வேலைக்குச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமியிடம் அறிமுகமாகியிருக்கிறார்.

அதையடுத்து கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறி சிறுமியைக் கடத்திச் சென்ற எழிலரசன், அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதையடுத்து அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, நடந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக சிறுமியின் பெற்றோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரௌடி எழிலரசனைக் கைதுசெய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

குற்றவாளி ரௌடி எழிலரசன்

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரான பச்சையப்பன் வாதாடிய இந்த வழக்கில், அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எழிலரசன் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி சுமதி, அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கினார்.

அத்துடன் சிறுமி கடத்தல் பிரிவில் பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்த அவர், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க