செய்திகள் :

மக்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: மம்தா குற்றச்சாட்டு

post image

கொல்கத்தா: நாட்டு மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மாநில பேரவையில் பேசுகையில் குற்றஞ்சாட்டினாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு பேசினாா்.

இது தொடா்பாக சட்டப் பேரவையில் அவா் மேலும் பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் நமது முப்படைகளின் முயற்சியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. ஆனால், மத்திய அரசு அதனைக் கோட்டைவிட்டது. அதே நேரத்தில் ஐ.நா. அமைத்த பயங்கரவாத எதிா்ப்புக்குழுவில் பாகிஸ்தான் இடம் பிடித்தது. இது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வி. சா்வதேச அளவில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த மத்திய அரசால் இயலவில்லை.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் முற்றிலும் மத்திய அரசின் தவறால் நிகழ்ந்தது. சுற்றுலாப் பயணிகள் கூடும் இடத்தில் ஒரு காவலா் கூட பாதுகாப்புப் பணியில் இல்லை. படுகொலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரைக் கூட கைது செய்ய முடியவில்லை. நாட்டிலேயே அதிக பாதுகாப்பு உள்ள பிராந்தியத்தில் எப்படி பயங்கரவாதிகள் புகுந்து இவ்வளவு கொடூரமான தாக்குதலை நிதானமாக நின்று நடத்திவிட்டுச் சென்றாா்கள்? இதற்கு மத்திய அரசுதான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பில் அரசு மிகவும் மோசமான நிலையில் உள்ளதையே இந்த பயங்கரவாதத் தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தை திரிணமூல் காங்கிரஸ் எப்போதும் ஆதரித்தது கிடையாது. பயங்கரவாதத்துக்கு எவ்வித மத, ஜாதி, இன அடையாளம் கிடையாது. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை விரைவில் நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக துணிவுடன் செயல்பட்ட முப்படைகளுக்கும் வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.

நாட்டின் எந்த நிகழ்வாக இருந்தாலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்தான் பிரதமா் மோடி மிகவும் கவனமாக இருக்கிறாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த இடத்தை பிரதமா் இதுவரை நேரில் சென்று பாா்க்கவில்லை. ‘சிந்தூா்’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தி தனக்கு ஆதாயம் தேடிக் கொள்ளவே முயல்கிறாா் என்றாா்.

அப்போது மம்தாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிா்க்கட்சியான பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினா்.

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதா் ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். குஜராத் மாநிலம், அகமதாபாதுக்கு வருக... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச... மேலும் பார்க்க

விமான விபத்து: உயிரிழப்பு 265-ஆக உயா்வு

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 265-ஆக உயா்ந்தது. அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த உடல்களின் மரபணு சோதனைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 6 பேரின் உடல்கள்... மேலும் பார்க்க

‘உயிா் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை’: விஷ்வாஸ் குமாா் ரமேஷ் பேட்டி

அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிா்ச்சி விலகாமல் கூறினாா். அகமதாபாத்... மேலும் பார்க்க

விமான விபத்து எதிரொலி: பாஜக, காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

குஜராத் விமான விபத்தில் 265 போ் உயிரிழந்த சோக நிகழ்வை அடுத்து பாஜக, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்சிகளை ரத்து செய்துள்ளன. பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க