செய்திகள் :

``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை" - அன்புமணி காட்டம்!

post image

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் நகரத்தில் வசிப்போர் அவரவரின் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதற்காக பேருந்துகளும், ரயில்களும் கூட்ட நெரிசலால் அலைமோதும். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்களை முன்பதிவு செய்வோரும் உண்டு. ஆனால், வேலை, விடுமுறை குறித்து சரியாகத் திட்டமிடாதவர்கள் கடைசி நேரத்தில் கிடைக்கும் பேருந்துகளில் பயணம் செய்யும் சூழல் ஏற்படும்.

இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ளூம் தனியார் ஆம்னிப் பேருந்துகள் டிக்கெட் விலையை ஏகபோகத்துக்கு உயர்த்திவிடுவதும், இதை ஒவ்வொரு பண்டிகையின்போதும் அரசு தலையிட்டு சரிசெய்ய முயற்சிப்பதும், ஒருகட்டத்தில் அது பயனில்லாமல் முடிவதும் வழமையாகிவிட்டது.

பாமக அன்புமணி
பாமக அன்புமணி

இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்கு ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக் கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு முறையும் அம்பலப்படுத்தி வருகிறது. அப்போதெல்லாம் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி ரூ.100 அல்லது ரூ.200 கட்டணக் குறைப்பு செய்ய வைப்பது, அதையும் மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது போன்ற ஏமாற்று வேலைகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது.

ஒரு மக்கள்நல அரசின் கடமை மக்களின் பக்கம் நிற்பது தான். திமுக அரசு மக்களின் பக்கம் நிற்கிறது என்றால், சட்டவிரோதமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் கட்டணங்களைக் குறைக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட திமுக அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பக்கம் நின்று அவை மக்களை சுரண்டுவதற்கு துணை போவதையே திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.

ஆம்னி பேருந்து
ஆம்னி பேருந்து

தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து, தனியார் முதலாளிகளுக்கு ஏவல் செய்வதையே கடமையாக வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை திமுக அரசு தடுக்கத் தவறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகத... மேலும் பார்க்க

''இதுவொரு முக்கியமான மைல்கல்" - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்... மேலும் பார்க்க

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந... மேலும் பார்க்க

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல" - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ... மேலும் பார்க்க

``உங்கள் கனவை சொல்லுங்கள்' என்கிறார் ஸ்டாலின்; திமுக ஆட்சியை அகற்றுவதே மக்களின் கனவு' - அண்ணாமலை

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்... மேலும் பார்க்க

`தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளும் ஒன்று சேர்கிறதா?' - இணைப்புக்கு அஜித் பவார் ஆர்வம்!

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் இரண்டாக உடைந்தது. இதனால் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் துணை முதல்வர் அஜித் பவார் பக்கம் சென்றனர்.... மேலும் பார்க்க