செய்திகள் :

"மனமகிழ் மன்றங்களில் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் ஆய்வு செய்யக் கூடாது" - உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

தமிழ்நாடு எப்.எல்.2  உரிமத்தாரர்கள் சங்கத் தலைவர் வீரபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,"எங்களுடைய சங்க உறுப்பினர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையிடமிருந்து சட்டப்பூர்வ உரிமம் பெற்று மனமகிழ், விளையாட்டு மன்றங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு டாஸ்மாக்கிடம் மதுபானம் கொள்முதல் செய்து விற்பதை செய்து வருகிறோம்.

தற்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி மனமகிழ் மன்றத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்வது போல வீடியோ எடுக்கின்றனர். 

இது தனிநபர்களின் தனியுரிமையை மீறும் செயல் என்பதோடு உரிமம் பெற்றவர்களை மிரட்டி பணமும் கேட்கின்றனர். பணம் தர மறுத்தால் வேறு வகையில் தாக்குதல் நடத்துகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி மற்றும் திருச்சி மாவட்டத்திலுள்ள  மனமகிழ் மன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆய்வு என்ற பெயரில் அனுமதியின்றி நுழைந்து, அங்கிருப்பவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு  மன்றத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு வருகின்றனர். 

மதுரை உயர்நீதிமன்றம் கிளை
மதுரை உயர்நீதிமன்றம் கிளை

மன்றங்களின் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆய்வு செய்கிறேன் என்கிற பெயரில் மனமகிழ்மன்றத்தில் நுழைந்து எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே சம்பந்தமில்லாத நபர்கள் மனமகிழ் மன்றங்கள் விவகாரத்தில் தலையிடாத வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனருக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவில், "மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் மனமகிழ் மன்றங்களில் ஆய்வு செய்யக்கூடாது. இதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" எனக் கூறி வழக்கை ஜூலை 23க்கு ஒத்திவைத்தார்.

தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத் தடை விவகாரத்தில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நா... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தில் அநாகரிக நடத்தை : நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரர்! - நடந்தது என்ன?

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஒருவர் நீதிபதிகள் அமர்வை நோக்கி ஆவணங்களை வீசி எறிந்த விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ காவல்துறை அதிகாரிக்கு எதிராக ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: `ஆட்சியை கவிழ்க்க சதி; ஹவாலா பணம்' - அனல் பறக்கும் வாதம் | முன்ஜாமீன் கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ இளையராஜா என்பவருக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காதலிக்கச் சொல்லி வற்புறுத்திய சமையல்காரர்; கைது செய்த சிங்கப்பெண் அதிரடிப்படை

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக ... மேலும் பார்க்க

த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பணம் வழங்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், IPDS நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஊழல் ... மேலும் பார்க்க

கரூர் வழக்கு: `உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்!' - மனுவை திரும்ப பெற்ற திமுக

கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சாட்சிகளை திசைதிருப்பும் வகையில் பேசுவதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிம... மேலும் பார்க்க