செய்திகள் :

"மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள்; பொறுப்புடன் நடந்துகொள்வோம்"- ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

post image

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.

‛குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.

அஜித்
அஜித்

இதனிடையே நேற்று முன்தினம் (டிச.6) 12 மணி நேர கார் ரேஸில் கலந்துகொண்ட அஜித் தன்னைப் பார்க்க வந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன.

மலேசியாவில் அஜித்தை காண நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் திரண்டு வருகிறது.

இந்நிலையில் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது என்னுடைய நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருடையதும். பொறுப்புடன் நடந்து கொள்வோம்" என்று அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்

அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார் சூர்யா. 'ஆவேசம்' ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சூர்யா47' படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்திருக்கிறது. அன்றே படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறத... மேலும் பார்க்க

AVM சரவணன்: `6.20-க்கு ‘மகாபாரதம்’ சீரியல் போடுவாங்க; அதுவரை பேசிட்டு இருப்பார்!’ - V.C.குகநாதன்

கதாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர்கட்டுரையாளர்: V.C.குகநாதன்சாதனையாளர் திரு.ஏவி. எம் சரவணன் அவர்கள், தந்தையார் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் ஒற்றை மனிதனாய் கட்டி எழுப்பிய ஏவி.எம் ஸ்டுடியோவை திறம்பட நடத்தி... மேலும் பார்க்க

Manjummel Boys: 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் அடுத்த படைப்பு; 'பாலன்' அப்டேட்ஸ்

மலையாளத்தில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூலைக் குவித்த படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மைக் கதையைத் திரைப்ப... மேலும் பார்க்க

"நிறைய கடன் இருக்கு, படம் எடுக்க முடியல, ஆனா.!"- புத்தக விழாவில் பேசிய சேரன்

சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசியது இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், " எப்படி சார் நிறைய பேர் உங்களை நேசிக்கிறார்கள் என்று என்னிடம் ச... மேலும் பார்க்க