BB Tamil 9: "நீங்க வெளிய வந்துருங்க" - சேதுபதியிடம் வாக்குவாதம் செய்த ரம்யா; திற...
மலேசியாவில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன்! - கோலிவுட் அப்டேட்ஸ்
டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் கர்நாடக சங்கீதம் களை கட்டும். ஒரு பக்கம் நாரத கான சபா, இன்னொரு பக்கம் மியூசிக் அகாடமி, மறு பக்கம் காமராஜ் மெமோரியல் ஹால் என்று ஒவ்வொரு அரங்கிலும் இசை மேளா இனிதே நடக்கும்.
கர்நாடக வித்வான்களின் இசைக் கருவிகளின் கச்சேரி, வாய்ப்பாட்டு பாட்டுக் ஆலாபனை கச்சேரி என்று கர்நாடக இசையில் கலந்து கட்டி அசத்துவார்கள்.
சென்னை போலவே இந்த டிசம்பர் மாதம் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என நட்சத்திரங்கள் மலேசியாவில் முகாமிட இருக்கிறார்கள்.
அஜித்குமார் கார் ரேஸ் பந்தயம், விஜய் `ஜனநாயகன்’ பட இசை வெளியிட்டு விழா, சிவ கார்த்திகேயன் சினிமா படப்பிடிப்பு என்று டிசம்பர் மாதம் மலேசியாவில் முகாமிடுகிறார்கள்.
அஜித் கடந்த இரண்டு வருடமாக தனது கனவு, லட்சியமான கார் ரேஸ் போட்டியில் மட்டுமே தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் நடந்த கார் ரேஸ் அவார்டு விழாவில் குடும்பத்தோடு பங்கேற்றார். அங்கே அவருக்கு அவார்டு வழங்கி கெளரவம் செய்தனர். இப்போது டிசம்பர் முதல் வாரத்தில் மலேசியாவில் நடக்கும் கார் ரேஸ் பந்தயம் நடக்கிறது. அஜித் கலந்து கொண்டு போட்டியில் தனது கை வரிசை காட்டி வருகிறார். தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்,

சிவ கார்த்திகேயன் நடித்து வந்த பராசக்தி படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. சிவ கார்த்திகேயன் டப்பிங் பேசி முடித்து விட்டார். அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதுப் படத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் முதல் செட்யூல் படப்பிடிப்பு மலேசியாவில் டிசம்பர் மாதம் முழுவதும் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர்.

விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுகிற திரைப்படம் `ஜனநாயகன்’. இந்த படத்தின் ஆடியோ விழாவை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி விமரிசையாக நடக்கும் ஆடியோ விழாவில் முக்கியமான சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல், சில அரசியல் புள்ளிகளும் மேடையில் கலந்து கொள்ள அதிரடி ஏற்பாடுகள் நடக்கிறது.
மலேசியாவில் பெருமளவில் மக்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட ஆடிட்டோரியத்தை விஜய் தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆக டிசம்பர் மாதத்தில் அஜித், விஜய், சிவ கார்த்திகேயன் மூவரும் மலேசிய மண்ணில் இருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து சிம்புவும் தற்போது மலேசியாவில் முகாமிட்டுள்ளார். இதனால் மலேசிய சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.















