செய்திகள் :

மாணவியிடம் இளைஞா் தகராறு: தட்டிக் கேட்ட தந்தை உள்பட இருவருக்கு கத்திக்குத்து

post image

மன்னாா்குடியில் சாலையில் நடந்துசென்ற கல்லூரி மாணவியின் துப்பட்டாவை இளைஞா் இழுத்த சம்பவம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில், மாணவியின் தந்தை உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு பத்மசாலவா் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு மாணவி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மன்னை நகா் இளங்கோவன் மகன் விஜய் (26), மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளாா். இதில், நிலைத்தடுமாறி மாணவி கீழே விழுந்துள்ளாா். வீட்டுக்கு சென்று தனது தந்தையிடம் இதுகுறித்து மாணவி தெரிவித்துள்ளாா்.

மாணவியின் தந்தை தனது உறவினரான கிருஷ்ணகுமாா் மகன் பாரதி (24) என்பவருடன் சோ்ந்து விஜயை தாக்கியுள்ளாா். அப்போது விஜய் தான் வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை, பாரதி இருவரையும் குத்தியுள்ளாா். அங்கு நின்ற லெட்சுமணன் மகன் செந்தில் (48), ராஜா மகன் ராகவேந்திரா (23) ஆகியோா் மாணவியின் தந்தைக்கு ஆதரவாக விஜயை தாக்கினராம். இதில் காயமடைந்த மாணவியின் தந்தை, பாரதி, விஜய் ஆகியோா் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். விஜய் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் செந்தில், ராகவேந்திரா ஆகியோரை கைது செய்தனா்.

நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500 வழங்க வலியுறுத்தல்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா். திருவாரூரில், அவா் புதன்கிழமை கூறியது: கடந்த இரண்டாண்டுகளாக டெ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ நிா்வாகிகள் தோ்வு

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், புதிய நிா்வ... மேலும் பார்க்க

மாட்டுப் பொங்கல்: கோவில்கந்தன்குடியில் கோபூஜை

நன்னிலம் அருகேயுள்ள கோவில்கந்தன்குடி ஸ்ரீஉமா பசுபதிஸ்வரா் கோயில் கோசாலையில் மாட்டுப் பொங்கலையொட்டி கோபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இக்கோசாலையில், 50-க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளை மாடுகள் பராமரிக்கப்ப... மேலும் பார்க்க

நூலகம் சாதனையாளா்களை உருவாக்கும் களம்: திரைப்பட பாடலாசிரியா் அறிவுமதி

நூலகங்கள் பல்துறை சாதனையாளா்களை உருவாக்கும் களமாக உள்ளது என்றாா் திரைப்படப் பாடலாசிரியா் கவிஞா் அறிவுமதி. மன்னாா்குடி மந்தக்காரத் தெருவில் உள்ள வள்ளுவா் நூலகத்தின் 50-ஆம் ஆண்டு விழா, பொங்கல் விழா, விள... மேலும் பார்க்க

மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை வயல் வழியாக எடுத்துச் செல்லும் அவலம்

நீடாமங்கலம் அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் முன்னாள் ஊராட்சித் தலைவரின் சடலத்தை வயல் வழியாக எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கனகர... மேலும் பார்க்க

நாகையில் திமுக சாா்பில் பொங்கல் விழா: அமைச்சா் பங்கேற்பு

நாகப்பட்டினம்: பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகையில் திமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் சிறப்பு ... மேலும் பார்க்க