செய்திகள் :

முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!

post image

கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது,

" கும்பகோணம் பேருந்து நிலையம் மிக முக்கியமான இடம். இங்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000ற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து போறோம். எங்களுக்கு இங்க முறையான கழிவறை வசதி இல்லை. ஒரு பேருந்து நிலையத்துல இருக்க வேண்டிய எந்தவிதமான அடிப்படை வசதியுமே இங்க முறையா இல்லை. பேருந்துக்காக நிற்கிற இடங்களில் கூட குண்டும் குழியுமாக தான் இருக்கு. இது சாதாரண நாட்கள்ல கூட பரவாயில்லை. கொஞ்சம் மழை பெஞ்சாக்கூட அந்த இடமே குட்டையா மாறிடுது.

இங்க பயணிகள் மட்டுமில்லாம வியாபாரம் செய்ற வியாபாரிகள் கூட அதிகமா பாதிக்கப்படுறாங்க. இங்க தேங்கி இருக்கிற மழைத்தண்ணியில வியாபாரம் பண்ண முடியாம நிறைய பேர் கஷ்டப்பட்டு இருக்காங்க.

பயன்பாடு இன்றி கிடக்கும் பாலூட்டும் அறை:

இங்கே அவசரத்துக்கு குழந்தைக்கு பாலூட்ட கூட இடம் இல்லை. 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முழுவதும் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறையினை வைத்தார். அதில் கும்பகோணமும் ஒன்று. இங்கு 2 மின்விசிறி, நாற்காலி, மின்விளக்குன்னு எல்லா வசதியும் இருந்துச்சு. ஆனா இப்போ கொஞ்ச காலமா இந்த பாலூட்டும் அறை பயன்பாடு இல்லாம பூட்டியே கிடக்கு. காரணம் என்னான்னு பார்த்தா அறையைச் சுற்றி அமைக்கப்பட்ட கண்ணாடிகள் உடைந்து, மின்விளக்குகள் எல்லாம் எரியாம வயர்கள் ஆபத்தான நிலையில் இருக்குது. இங்கு ஏராளமானோர் தாய்மார்களும் வராங்க. ஒரு குழந்தைக்கு பசிய ஆத்தக் கூட இடம் இல்லாமல் இருக்கிறது சிரமமா இருக்கு. அரசு இத சீக்கிரமாவே சரி செய்யணும்.

கழிவறையும் பயன்பாடு இன்றி துர்நாற்றம் வீசுது:

தாய்மார்கள் பாலூட்டும் அறையை ஒட்டி தான் இலவச கழிப்பறை இருக்கு. ஆனா அது இருக்கிறதும் ஒன்னு தான் இல்லாம இருக்கிறதும் ஒன்னு தான். கும்பகோணம் பேருந்து நிலையத்துல நவீன கட்டண கழிப்பறைகள் இருக்கு. ஆனா அதை இடத்துலே இருக்கிற பொதுக் கழிப்பறை பயன்பாடுகள் இல்லாம பூட்டியே இருக்கு. ஆண்களுக்கு கூட இலவச கழிப்பறை ஒன்னு இருக்கு. பெண்களுக்குனு இருக்கிற கழிப்பறை தூய்மை இல்லாம பூட்டியே இருக்கு. பூட்டுனது மட்டும் இல்லாம கழிப்பறை வாசலிலே குப்பையை கொட்டியும் வச்சிருக்காங்க. இதனால ரொம்ப துர்நாற்றம் வீசுது. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துது. ஒரு அவசரத்துக்கு கூட ஒதுங்க முடியாத நிலைமையில இருக்கோம். இதை அரசு சீக்கிரமாகவே சரி பண்ணா நல்லா இருக்கும்.

பேருந்து நிறுத்தும் இடம் குண்டும் குழியுமா இருக்கு:

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகள் நிக்கிற இடம் இருக்கு. அந்த மினிபஸ் நிக்கிற இடத்துல ரோடு குண்டும் குழியுமா இருக்குது. சாதாரண நாள் கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சம் மழை பெஞ்ச உடனே இங்க ஒரு குட்டி குளமே உருவாகிடுது. இங்கு பேருந்துக்காக நிற்கிற பயணிகளுக்கு இந்த இடம் மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது. இந்த இடத்துல தண்ணீர் தேங்கி இருப்பதினால எங்களால பஸ்ல கூட சரியா ஏற முடியல. நடக்கிற இடத்துல கரண்ட் ஒயர் கட் ஆகி விழுந்தா கூட தெரியாது. அந்த அளவு தண்ணீர் தேங்கிய படியே இருக்குது.

தொற்று நோய் பரவும் அபாயம்:

இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை குப்பைகள் எல்லாம் மழைத் தண்ணீரோட ஒண்ணா கலக்குது. மழைத் தண்ணீரும் கொஞ்சம் கூட வற்றாம அப்படியே தெப்பம் போல தேங்கி தான் இருக்கு.

இங்க குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை ஏராளமானோர் பயணிக்கிறாங்க. இந்த கழிவு நீர் தேக்கத்தால் தொற்று நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கு. இந்த சாலையையும் அரசு உடனடியாக சரி செய்யனும்னு கேட்டுக்குறோம்.

இந்த ஊரில் இப்படி பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது ரொம்பவும் கஷ்டத்தை ஏற்படுத்துது. இந்த ஊருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க. அப்படிப்பட்ட இந்த ஊரில அடிப்படை வசதியான பாலூட்டும் அறை மற்றும் கழிவறை வசதி இல்லங்குறது பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. இதை எல்லாம் அரசு விரைந்து சரி செய்யனும். இதுதான் நாங்க அரசுக்கு முன் வைக்கிற கோரிக்கையாகும். விரைவில் பாலூட்டும் அறை மற்றும் கழிவறை புணரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று நாங்க நம்புறோம்" என்கிறார்கள் பயணிகள்.

அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமி... மேலும் பார்க்க

``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?" - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது.தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது.`தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி" - முத்தரசன் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவை... மேலும் பார்க்க

கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்ட... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர் சாதனையை சமன் செய்த ஒரே முதல்வர் - மக்கள் மன்றத்தில் ஜெ.ஜெயலலிதா!

ஜெயலலிதாவை ஏன் பிடித்தது தமிழ்நாட்டு மக்களுக்கு?‘யாருக்குங்க பிடிச்சது, அவங்க நீதிமன்றத்தால் ஏ 1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்’ என்று சொல்லாம் சிலர்.அவர் எடுத்த நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு ஆளாகி இர... மேலும் பார்க்க