செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

post image

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,568 கனஅடியாக சரிந்தது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியில் இருந்து 108.55 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,273 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,568 கனஅடியாக சரிந்துள்ளது.

டெல்டா பாசன தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,500 கனஅடியிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 76.29 டிஎம்சியாக உள்ளது.

ஸ்டாலின் 20 ஆண்டுகள் உழைத்தார்: இபிஎஸ்

திமுகவிற்காக 20 ஆண்டுகள் ஸ்டாலின் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலம் வீரப்பம்பாளையத்தில் ஞாயிற்றுகிழமை நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்ட... மேலும் பார்க்க

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி நவ. 5-ல் தொடக்கம்! - உதயநிதி அறிவிப்பு

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் குறித்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 போட்டிகள் வருகிற நவம்பர... மேலும் பார்க்க

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

தீபாவளி முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.தீபாவளி பண்டிகை ஒட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை, பெங்களூர்... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம்; ஹிந்தியை அல்ல: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

ஹிந்தி மொழியை எதிா்க்கவில்லை; ஹிந்தி மொழித் திணிப்பை மட்டுமே எதிா்க்கிறோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா ஊடகக் குழுமம் சாா்பில் சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் 95 % நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் மாா்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 95 சவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேகம் காட்டுங்கள்: தோ்தல் துறை வேண்டுகோள்

பாா்முலா 4 பந்தய காா்களின் வேகத்தைப் போன்று, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேகம் காட்ட வேண்டுமென தமிழக தோ்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 29-ஆம் தே... மேலும் பார்க்க