Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை.
இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் என்கிற பெரிய எதிர்பார்ப்பு இந்தியாவில் இருந்து வருகிறது.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை இன்னமும் இழுத்துக்கொண்டே போகிறது. அவ்வப்போது, 'பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்' என்கிற செய்தி வந்தாலும், அது செய்தியாகவே முடிந்துவிடுகிறது.
இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடுவதற்கான உண்மையை பாட்காஸ்ட் ஒன்றில் கூறியுள்ளார், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்.

அவர் கூறியுள்ளதாவது...
"இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒப்பந்தம். அவர்தான் ஒப்பந்தம் போடப்போகிறார்.
அதனால், ட்ரம்பிற்கு இந்திய பிரதமர் மோடி போன்கால் செய்ய வேண்டும்" என்று பேசியுள்ளார்.
ட்ரம்ப் மோடியின் போன்காலுக்காக காத்திருக்கிறார் என்பது லுட்னிக்கின் பேச்சில் இருந்து தெரிகிறது. இதுவரை அமெரிக்கா முடித்துள்ள ஒப்பந்தம் அனைத்துமே அந்தந்த நாட்டின் அதிபர்களின் போன்காலுக்குப் பிறகே பெரும்பாலும் முடிந்துள்ளது.
இந்தியா மீது மேலும் வரியை உயர்த்தப்போகிறேன் என்று ட்ரம்ப் லேட்டஸ்ட்டாகக் கூறி வருகிறார். இந்த நேரத்தில், இந்தியா அடுத்து என்ன செய்யப்போகிறதோ?














