ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
``ரஷ்ய அதிபரின் வருகையால் இந்தியாவுக்கு பொருளாதார இழப்புதான்'' - சொல்கிறார் அப்பாவு
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு,
“ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும், ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. எனினும், இங்கிருந்து ரூ.45 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி நடக்கிறது.
ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நான்கு பெரிய தொழிலதிபர்கள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள்.

அதனால் இந்திய மக்களுக்கு ஒருவருக்கும் லாபம் இல்லை. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய நாட்டு பிரதமரை இந்திய பிரதமர் இந்தியா வரவழைத்துள்ளார்.
சோவியத் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவர சென்னையில் உள்ள அதானி துறைமுகத்திற்கு கடல் வழியே கொண்டு வரவுள்ளனர். இதனால் 40 சதவீதம் மிச்சம் எனத் தெரிவித்துள்ளதை மகிழ்ச்சியாகக் கருதுகிறோம். ஆனால் எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பொருளாதார இழப்புதான்.
லாபம் வர வேண்டும் என்றால், குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். ரூ.40க்கு விற்கப்பட வேண்டிய பெட்ரோலை ரூ.100க்கு விற்கின்றனர். அந்த 60 சதவீத லாபம் தனியாருக்குச் செல்கிறது; மக்களுக்கு இல்லை. இதற்காகத்தான் ரஷ்ய அதிபர் தற்போது இந்தியா வந்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சதி திட்டம் தீட்டி 50 பேரை உள்ளே அனுப்பியுள்ளனர். இதற்காக சில அதிகாரிகள், நிர்வாகங்கள் துணை போகின்றன.
நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவை வைத்துக் கொண்டு கலவரத்தை உருவாக்க சதி செய்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் முதல்வர் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதுவந்தாலும் எதிர்கொள்வார்” என்றார்.















