"என் கல்யாணத்தை பத்தி யாராச்சும் கேட்டா Irritating-ஆ இருக்கு" - நடிகை மும்தாஜ் B...
ராக்கெட் வேகத்தை மிஞ்சும் தங்கம் விலை - என்ன நடந்தால் கட்டுக்குள் வரும்?
ராக்கெட்டைத் தாண்டிய 'சர்ர்ர்...' வேகத்தில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.
எப்போது தான் இந்த வேகத்திற்கு 'என்ட் கார்டு' வரும் என்பது நம் எல்லோரின் எதிர்பார்ப்பு.
தங்கம் விலையின் வேகம் எப்போது மட்டுப்படும் என்பதைப் பார்ப்பதற்கு முன், தங்கம் விலை ஏன் உயர்கிறது என்பதை பார்க்கலாம்.

> ஈரான் உள்நாட்டு போராட்டம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிடும் 'திடீர்... அதிர்ச்சிகர' அறிவிப்புகள், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் அவ்வப்போது பாலஸ்தீனத்தின் மீது நடத்தும் தாக்குதல் என உலகத்தில் பெரியளவில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.
> அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஜெரோம் பவல் மீது ட்ரம்ப் ஊழல் புகார் சுமத்தியுள்ளார். இதற்கான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
> அரசியல் நிலையற்ற தன்மை காரணங்களால், சந்தைகளிலும் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் 'பாதுகாப்பு முதலீட்டை' தேடி நகர்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு முதலீடாக தெரிவது 'தங்கம்'.
> மேலே சொன்ன அதே காரணம் தான்... அரசியல் நிலையற்ற தன்மைக் காரணத்தால், உலக வங்கிகள் தங்கம் வாங்கி குவித்து வருகின்றன.
> அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது.
இவை தான் தங்கம் விலை ஏற்றத்திற்கான மிக முக்கிய காரணங்கள்.
இந்தக் காரணங்களின் விளக்கத்தை வைத்தே 'அரசியல் நிலையற்ற தன்மை' தான் தங்கம் விலையின் ஏற்றத்திற்கு மிக முக்கிய காரணம் என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.

தங்கம் விலை இப்படி வேகமாக உயராமல் இருப்பதற்கும்... புதுப்புது உச்சங்களைத் தொடாமல் இருப்பதற்கும் அரசியல் நிலைத்தன்மை மிக அவசியம்.
அதை நோக்கி உலக நாடுகள் நகர வேண்டும். இதற்கு உலக நாடுகளுக்கு மத்தியில் நட்புணர்வு அதிகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசாங்கமும் தங்களது கொள்கைகளை பொருளாதார வலுப்படுத்தை நோக்கி வகுக்க வேண்டும். இது நாணயங்களின் மதிப்பை நிலைப்படுத்தும்.
இவை நடந்தாலே, சந்தை ஏற்றம் அல்லது நிலைத்தன்மையைக் காணும். அது முதலீட்டாளர்களை சந்தையின் பக்கம் அழைத்து செல்லும்.
பிறகு என்ன, தானாக தங்கம் விலை உயர்வு கட்டுக்குள் வரும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.


















