செய்திகள் :

ராமநாதபுரம்: கடன் தர மறுத்த மூதாட்டி கொலை... காதணியுடன் தப்பிய கொலையாளி கைது!

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் அம்மாள் (70). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் ஆறுமுகம் அம்மாளை அவரது மூத்த மகள் செல்வம் என்பவர் பராமரித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி இரவு ஆறுமுகத்திற்கு இரவு உணவு கொடுத்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார் செல்வம்.

மறுநாள் காலை செல்வம் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது தாயார் ஆறுமுகம் காது மற்றும் மூக்கில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். மேலும் ஆறுமுகம் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோடுகளும் காணாமல் போயிருந்தன. இச்சம்பவம் குறித்து ஏர்வாடி தர்ஹா போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.

மீட்கப்பட்ட தோடுகள்
கொலையாளி மோகன்

இந்நிலையில் அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஆறுமுகம் வீட்டின் வேலி வழியாக அடையாளம் தெரியாத நபர் வந்து சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸார், சத்திரக்குடி பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளியை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் மதுரை அரிட்டாபட்டியில் வசித்து வந்த மோகன் என்பதும், ஆறுமுகத்தின் வீட்டருகே நடந்த பேருந்து நிழற்குடை கட்டுமான பணியில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் மூதாட்டி ஆறுமுகத்திடம் ரூ 10 ஆயிரம் கடன் வாங்கியிருந்த மோகன், அதனை திருப்பி கொடுக்காமல் மேலும் கடன் கேட்டு சென்றுள்ளார். அப்போது மூதாட்டி ஆறுமுகம் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், மூதாட்டி ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடையும் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மோகனை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

சென்னை: ரெளடி கருப்பு, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கைது: நாட்டு வெடிகுண்டு பறிமுதல் - என்ன நடந்தது?

சென்னையில் உள்ள திருமுடிவாக்கத்தைச் சேர்ந்தவர் கருப்பு (எ) தமிழ் அழகு.இவர் மீது கொலை வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன. இதனால், இவர் காவல்துறையின் 'A' பிரிவு பட்டியலில் இருக்கும் ரெளடி ஆவார்.கட்டப் ப... மேலும் பார்க்க

சேலம்: தலைக்கேறிய போதை; விபத்தை ஏற்படுத்திவிட்டு தீப்பொறி பறக்கச் சென்ற கார் - வைரலாகும் வீடியோ!

சேலம் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. கஞ்சாவில் தொடங்கி போதை மாத்திரை, ஊசிகள் வரை பல்வேறு போதைப் பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமயாகி வருகின்றனர். போ... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கரூரில் கைப்பற்றப்பட்ட அதிக பணம்! - நடந்தது என்ன?

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ.82.10 லட்சம் சிக்கியள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் 'Boss Scam' மோசடி: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு செபி அவசர எச்சரிக்கை!

நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, ஊழியர்களிடம் பணம் பறிக்கும் 'பாஸ் ஸ்கேம்' மோசடிகள் இந்தியாவில் அண்மைக்காலமாக பெருமளவில் அதிகரித்து வருகி... மேலும் பார்க்க

ITR: '3000 பேரைப் பயன்படுத்தி ரூ.357 கோடி மோசடி'- வருமான வரித்துறையை மிரள வைத்த உத்தரப்பிரதேசப் பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் திட்டமிட்டு நாடு தழுவிய அளவில் நடத்திய மிகப் பெரிய போலி வருமான வரி மோசடியை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. க... மேலும் பார்க்க

'டிராக்டர் வாடகைய கொடுக்கல' - கணவனைத் தண்டிக்க மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

மகாராஷ்டிராவில் இப்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். உழவு பணிகளுக்கு அதிக அளவில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு வாடகைக... மேலும் பார்க்க