செய்திகள் :

விவசாயம், வணிகம், முதலீட்டிற்காக நிலம் வாங்கினால்? - ரியல் எஸ்டேட் வழிகாட்டி | பணம் வளர்ப்போம்

post image

நிலம் அல்லது வீடு வாங்குகிறோம் என்றால், எல்லா நேரத்திலும் அங்கே வசிப்பதற்காக மட்டும் அதை வாங்கமாட்டோம்.

நிலம் அல்லது வீட்டை முதலீடாகவும், விவசாயத்திற்காகவும், வணிகத்திற்காகவும் வாங்குபவர்கள் ஏராளம்.

அப்படி வாங்கும்போது, எதையெல்லாம் அந்த இடத்தில் கவனிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிடுகிறார் வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி.

முதலீடாக வாங்குகிறீர்களா?

அந்த நிலம் அல்லது வீட்டின் மதிப்பு நிச்சயம் குறுகிய கால அளவில் உயர்வதாக இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் உடனடியாக சந்தையில் விற்பனை செய்யக் கூடிய இடத்தை அடையாளம் கண்டு தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி
வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி

நில சம்பந்தப்பட்ட வருவாய் துறை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல், A பதிவு, FMB, அனைத்து வித அப்ரூவல்களும், தடையில்லா சான்று, மற்ற சொத்து சார்ந்த விற்பனை ஆவணங்கள் பக்காவாக இருக்க வேண்டும்.

எளிதாக வங்கிக் கடன் கிடைக்கக்கூடிய இடமாக இருக்க வேண்டும். அப்போதுதான், ஒருவேளை, உங்களிடம் நிலம் அல்லது வீடு வாங்குபவரின் கையில் அச்சமயம் போதிய பணம் இல்லையென்றாலும், வங்கிக் கடன் எடுத்து அந்த இடத்தைச் சுலபமாக வாங்குவார்கள்.

இந்த இடம் மெயின் ஏரியாவில் அல்லது அதற்கு அருகாமையில் இருப்பது மிக மிக அவசியம். 5 - 10 ஆண்டுகளில் நல்ல சந்தை வளர்ச்சியைக் காண்பதாக இருக்க வேண்டும்.

முக்கியமாக, நிலம் அல்லது வீட்டின் மேல் எந்தவொரு வழக்கும், ஒப்பந்தமும் நிலுவையில் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.

விவசாயத்திற்காக நிலம் வாங்குகிறீர்களா?

நிலத்தில் மண் வளமும், நீர் வளமும், பாதுகாப்பான உடமையும் முழுமையாக இருக்க வேண்டும். நீர் வளத்திற்கு நிலத்தின் அருகே குளம், குட்டை, ஏரி, ஆறு இருப்பது நல்லது. அல்லது எப்போதும் போதிய நிலத்தடி நீர் நிறைந்த நிலமாக இருக்க வேண்டும்.

விவசாய நிலம்
விவசாய நிலம்

அப்போது தான் எல்லா சீசன்களிலும் அனைத்து விதமான பயிர் செய்ய ஏதுவாக இருக்கும்.

உடனடி மின்சார விநியோக வசதி போதுமானதாக இருக்க வேண்டும். மிகுந்த போக்குவரத்து வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். இது பயிர் செய்தவற்றை தொழிற்சாலை, விற்பனை கூடங்கள் அல்லது வெளி வியாபார சந்தைகளுக்கு, தினசரி, விற்பனைக்கு எடுத்துச் செல்ல பெரிய உதவியாக இருக்கும்.

போக்குவரத்து சாலைகளோ, விற்பனை செய்யும் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரி, டெம்போ, டிராக்டர்கள், கண்டெய்னர் வந்து செல்ல போதுமான அளவு அகலம் கொண்ட விரிவான சாலைகளாக இருக்க வேண்டும்.

வணிக நோக்கத்திற்காக நிலம் வாங்குகிறீர்களா?

நிலத்தின் அருகே தொழிற்சாலைகள், ஐடி பார்க்குகள், வணிக வளாகம், மால் மற்றும் சூப்பர் மார்க்கெட், பஸ், மெட்ரோ ரயில், துறைமுகம், விமான நிலையம் இருக்க வேண்டும்.

அகலமான தார் சாலை வசதி இருக்க வேண்டும். பெண்கள் ஹாஸ்டல், PG ஹாஸ்டல், நட்சத்திர ஓட்டல், பெட்ரோல் பங்க், உணவு விடுதி, சாலையோர மின் விளக்கு, தடையில்லா மற்றும் போதுமான அளவில் மின்சார விநியோகம் போன்றவை இருப்பது உள்ளூர் பணியாளர் மற்றும் பணியில் உள்ள வெளிநாட்டினர் அவர்தம் பணிகளைச் சுலபமாகச் செய்ய ஏதுவாக இருக்கும்.

வணிக நிலம்
வணிக நிலம்

சிறிய மற்றும் பெரிய வாகனங்கள் பார்க்கிங்கிற்கான வசதி, வணிக மின்சார இணைப்பு, தேவையான குடிநீர் வழங்கல் வசதி, மழைநீர் வடிகால் வசதி, தினசரி பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரி, டெம்போ போன்றவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போதுமான அளவு இட ஒதுக்கீடு போன்றவை இருக்க வேண்டும்.

குறுகிய கால வளர்ச்சி மிகுந்த இடங்களில் வணிக நோக்கத்திற்காக வாங்கும் கட்டடங்கள் அல்லது நிலம் மிகுந்த பொருளாதார வளர்ச்சி ஈட்டித் தரும்.

மண் வளமும் சிறப்பாக இருக்க வேண்டும்.

நிலத்தின் மீது எந்த வழக்கும் நிலுவையில் இருக்கக்கூடாது மற்றும் நிலத்திற்குத் தேவைக்கு ஏற்ப தடையில்லா சான்றிதழ்கள், அப்ரூவல் கட்டாயம் வேண்டும்.

அந்த இடத்திற்கு வந்து செல்ல ஏதுவாக தேசிய நெடுஞ்சாலை, உள்வட்ட, வெளிவட்ட சாலைகளில் இருந்து அணுகுசாலை வசதிகளும் இருக்க வேண்டும்.

வணிக நோக்கத்திற்காக இந்த நிலம் வாங்கப்படுவதால், நல்ல வாடகை ஈட்டும் வாய்ப்பு கிடைப்பதாக இருக்க வேண்டும். எதிர்காலத்திலும் நிலத்திற்கு நல்ல சந்தை மற்றும் மூலதன மதிப்பு வளர்ச்சி இருக்க வேண்டும்.

வணிக நிலம்
வணிக நிலம்

வணிக நோக்கத்திற்காக நிலம் வாங்குபவர்கள் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ள நிலத்தை மட்டுமே வாங்க வேண்டும்.

முக்கியமாக, அரசாங்க ஆவணங்களில், வணிக வகைப்பாடு கொண்ட இடத்தை மட்டுமே தேர்வு செய்வது மிக மிக முக்கியம். பலர், விஷயம் தெரியாமல் இருக்கிறார்கள் விவசாய நிலத்தை வணிகப் பயன்பாட்டிற்கு வாங்கிவிடுகிறார்கள். அது பின்னர் துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை இழுத்து வரும்.

நிலத்தின் மீது எளிதாக வங்கிக் கடன் பெற கூடிய சாத்தியம் இருக்க வேண்டும்".

Single Parent: Retirment பிளானிற்கு எதில் முதலீடு செய்யலாம்?| பணம் வளர்ப்போம்

வாழ்க்கை முழுவதும் ஓடி நிம்மதியாக உட்காருவது 'ரிட்டயர்மென்ட்' காலத்தில் தான். பிற பெற்றோர்களை விட, சிங்கிள் பேரன்டுகள் சற்று அதிகமாகவே ஓடியிருப்பார்கள். அதனால், அவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கால ஓய்வு மி... மேலும் பார்க்க

Single Parent: அவங்க குழந்தைகளின் கல்விச் செலவை எப்படி பிளான் செய்ய வேண்டும்? | பணம் வளர்ப்போம்

இன்று ஒவ்வொரு பெற்றோர்களும் ஓடியாடி உழைப்பது - அவர்களது குழந்தையின் எதிர்காலத்திற்காக தான். அந்த எதிர்காலத்தை சிங்கிள் பேரன்டுகள் எப்படி சிறப்பாக கட்டமைக்கலாம் என்பதை கூறுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் ல... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இறக்கத்தில் SIP-யை நிறுத்துவது புத்திசாலித்தனமா? இதனால் லாபம் கிடைக்குமா?

காய்கறி சந்தை: தக்காளி விலை 1 கிலோ ரூ.50... நீங்கள் ஒரு கிலோ தக்காளியை வாங்குகிறீர்கள். 30 நாள்களுக்குப் பிறகு... தக்காளி விலை 1 கிலோ ரூ.25... 'சூப்பர்' என்று நினைத்து, நீங்கள் ஒரு கிலோ தக்காளிக்குப் ... மேலும் பார்க்க

Rajesh Exports விவகாரம்: LIC-ல் செய்த முதலீடு, காப்பீட்டிற்கு பிரச்னையா?

கடந்த இரண்டு வாரங்களாகவே, பங்குச்சந்தை உலகின் பரபரப்பு டாபிக், 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்'. கடந்த 3-ம் தேதி, செபி இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது. அதாவது, செபி இந்த நிறுவனத்தின் 2020... மேலும் பார்க்க

Single Parent: குழந்தை எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஆயுள் காப்பீடு எவ்வளவு வேண்டும்?|பணம் வளர்ப்போம்

ஒருவர், ஒரு சம்பாத்தியம் என்று ஒரு வண்டி மாட்டை நம்பி தான் சிங்கிள் பேரன்டுகளின் வாழ்க்கை ஓடும். அதனால், அந்த ஒருவர் மிகப் பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும். அதற்கான ரூட்டைக் கா... மேலும் பார்க்க

சவுதி வாழ் NRI-களுக்கான ரிட்டைர்மென்ட் பிளான்: 50+ வயதினர் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

சவுதி அரேபியாவில் பல வருடங்களாக உழைத்து, சேமித்த பணத்துடன் தாயகம் திரும்பத் திட்டமிடும் என்.ஆர்.ஐ-களுக்கு (NRIs) ஓய்வுகாலத் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒன்று. 50 வயதைத் தாண்டியவுடன், 'கையிலிருக்க... மேலும் பார்க்க