செய்திகள் :

வெற்றி அருளும் உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில் மகா கும்பாபிஷேகம்; ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகள் முன்னிலை!

post image

சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகர், திலகர் தெருவில் அமைந்திருக்கிறது பழைமையான விஜய கணபதி திருக்கோயில். இந்தப் பகுதியின் அடையாளமாகத் திகழும் இந்தக் கோயிலுக்கு மகாபெரியவர் முதலான மகான்கள் பலரும் வருகை தந்து தரிசனம் செய்து இத்தலத்தின் மகிமைகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் இந்த விநாயகர் காரியத் தடைகளை அகற்றி வெற்றியைக் கொடுப்பார் என்பதை உணர்ந்த மகாபெரியவர் 1975 - ம் ஆண்டு, ''இந்த ஸ்வாமிக்கு ஸ்ரீவிஜயகணபதின்னே பேர் வைங்கோ'' என்று திருநாமம் சூட்டி அருளினார். அன்றுமுதல் இன்றுவரை இந்த விநாயகர் உள்ளகரத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல.

உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில்
உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில்

கவலையோடு இந்த விநாயகரின் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் அக்கவலைகள் தீர வழிபிறக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

குறிப்பாக நல்ல வேலை கிடைக்காதவர்கள், பார்க்கும் வேலையில் பிரச்னை இருக்கிறது என்று வருந்துபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து விஜயகணபதியைத் தரிசனம் செய்து அவருக்கு ஒரு தேங்காய் உடைத்து வழிபட்டுச் சென்றால் கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் விலகும் என்பது நம்பிக்கை.

பிள்ளையார் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானவர். இந்தப் பிள்ளையாரை நிறைய குழந்தைகள் பிரியத்துடன் வந்து வழிபட்டுச் செல்வர். அப்படித் தன்னை வந்து வணங்கும் குழந்தைகளுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் கொடுத்துப் பேரும் புகழும் அடைய வைப்பார் இந்த விநாயகர் என்கிறார்கள். மேலும் இந்தப் பகுதி மிகவும் சிறப்புடன் திகழக் காரணமும் இந்த விஜயகணபதிதான் என்கிறார்கள் ஊர் மக்கள்.

இந்த ஆலயத்தில் மூலவராக விநாயகர் எழுந்தருளியிருக்க ஸ்ரீவிஜயகுமாரசுவாமி, ஸ்ரீவிஜயராகவர், ஸ்ரீவிஜய மணிகண்டர், ஸ்ரீவிஜயதுர்கா, ஸ்ரீவிஜயமாருதி மற்றும் நவகிரகங்கள் ஆகியோரும் சந்நிதிகொண்டு அருள்கின்றனர்.

இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று 22.6.1994-ம் ஆண்டுமுதல் தினமும் இங்கே மகாகணபதி ஹோமம் நடைபெற்றுவருகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொள்வதே மிகவும் சிறப்பான ஒன்று. இதில் கலந்துகொண்டு வழிபாடு செய்ய சகலவிதமான பிணிகளும் விலகும் என்கிறார்கள்.

உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில்
உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில்

இப்படிப்பட்ட பெருமையும் மகிமையும் வாய்ந்த விஜய கணபதி ஆலயத்தில் வரும் 16 ம் தேதி காலை 010.30 முதல் 11.15 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்தக் கும்பாபிஷேகத்தை காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்திவைக்க இருக்கிறார்.

மிகவும் சிறப்பாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று நிகழ இருக்கும் இந்தக் கும்பாபிஷேக நிகழ்வைத் தரிசிப்பதும் அதில் பங்கு கொள்வதும் மிகவும் புண்ணியம் தரும் செயலாகும். குருவருளும் திருவருளும் தரும் கும்பாபிஷேக நிகழ்வுகளைத் தரிசிப்பதே நம் வினைகளை நீக்கும். எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீவிஜயகணபதியின் அருளைப் பெறலாம்.

முதல்வர் விஜய் வழிபட்ட கொல்லூர் மூகாம்பிகை - தங்க வாள், கஷாய பிரசாதம்.. வியக்க வைக்கும் தகவல்கள்!

முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலம், கொல்லூரில் அமைந்திருக்கும் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாகக் கருதப்படும் அன்னை மூகாம்பிகையை வழிபட்டால் வாழ்வில் உண்டாகும் த... மேலும் பார்க்க

கரூர் மாவட்டம், தொப்பேஸ்வரர் கோயில்: கால்நடைச் செல்வங்கள் பெருகும்... தொழில் மேன்மையுறும்!

மலை மீது கோயில் கொண்டிருக்கும் ஈசனின் சந்நிதிகள் சாந்நித்தியம் நிறைந்தவை. எனவேதான் கடும்பாடுபட்டு பக்தர்கள் மலையேறி சுவாமியைத் தரிசனம் செய்கிறார்கள். அதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமும் அட... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தல்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி சுயம்பூற்றுநாதர் கோயில் : மனச்சுமைகள் குறையும்... உற்சாகம் பிறக்கும்!

இன்றைக்குப் பல்வேறு மலைத் தலங்களுக்கும் பயணிக்க பஸ், கார், ரோப் கார் வசதிகள் வந்துவிட்டன. ஆனால் இயற்கைக் காற்று மேனியில் படர சுவாமியைத் துதித்தபடியே மலையேறி வழிபடுவது ஓர் அலாதியான அனுபவம். அப்படி ஒரு ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு, பொன்விளைந்த களத்தூர்: 3 திருக்கோலத்தில் ஸ்ரீராமர்; ஸ்ரீஹயக்ரீவரின் காலடி பட்ட தலம்!

செங்கல்பட்டு நகரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். இந்த ஊரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவு பயணித்தால், பொன்பதர்கூடம் தலத்தை அடையலாம். இந்தத் தலத்தில் மாபெரும் அற்... மேலும் பார்க்க

6 நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய அம்பர் மாகாளம்: யோக ராகு, யோக கேது அருளும் அபூர்வ கோயில்!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலஹால விஷம் வெளியானது. பிரபஞ்ச நன்மையின் பொருட்டு ஈசன் அதை ஏற்றுக்கொண்டார். அந்த கொடிய விஷத்தின் பாதிப்பால் பொன்னாற்மேனியனான பெருமானின் திருமேனியின் கண்டம்... மேலும் பார்க்க