செய்திகள் :

வேலூர்: பெண் சிசுவை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது; நல்லடக்கம் செய்த போலீஸ் - நடந்தது என்ன?

post image

வேலூர் அரசு `பென்ட்லேண்ட்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம், பச்சிளம் பெண் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை பகுதியிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்தைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், பென்ட்லேண்ட் மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளின் விவரங்களையும் சேகரித்தனர்.

 தந்தை - பாட்டி
தந்தை - பாட்டி

அதில், கால்வாயில் வீசப்பட்ட சிசு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகிலுள்ள தாழனூரைச் சேர்ந்த பெயின்டர் தொழிலாளி வினோத் (28) மற்றும் அவரின் மனைவி முனியம்மாள் (25) ஆகியோருக்கு பிறந்தது எனத் தெரியவந்தது. முனியம்மாள் டிஸ்சார்ஜ் செய்யப்படாமல் தொடர் சிகிச்சை பெற்று வருவதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவரின் கணவன் வினோத் மற்றும் மாமியார் சுமதி (55) ஆகிய இருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். படுபாதக செயலில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அதாவது, வினோத் - முனியம்மாள் தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக கருத்தரித்த முனியம்மாளுக்கு வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு இல்லாமல் இருந்திருக்கிறது. இதையடுத்து, கடந்த 22-ம் தேதி வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது, சிசு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

நல்லடக்கம் செய்த போலீஸார்

அன்று காலை 11.30 மணியளவில், அறுவை சிகிச்சை மூலம் பெண் சிசுவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் சிசுவின் உடலை தந்தை வினோத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர். சொந்த கிராமத்துக்கு சிசுவின் உடலை எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்ய விரும்பாத வினோத்தும், அவரின் தாய் சுமதியும் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அன்று மழை பெய்த காரணத்தினால், கழிவுநீர் கால்வாயில் தண்ணீரும் அதிகமாக இருந்திருக்கிறது. அதில், சிசுவின் உடல் மூழ்கி, 2 நாள்களாக மிதந்து வந்ததும் தெரியவந்தது.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இக்கொடூர விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கல்நெஞ்சம் கொண்ட வினோத்தையும் அவரின் தாய் சுமதியையும் கைது செய்தனர். மேலும், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிசுவின் உடலைப் பெற்று போலீஸாரே வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்து மலர் தூவினர்.

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப்... மேலும் பார்க்க

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ - கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனு... மேலும் பார்க்க

`ரூ.50 லட்சத்துக்கு ஆடம்பர பைக் கேட்டு ரகளை' - மகனை கம்பியால் அடித்துக்கொன்ற தந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வஞ்சியூரைச் சேர்ந்தவர் வினயானந்த் (52). இவரது மகன் ஹிருத்திக்(28). ஹிருத்திக் ஆடம்பர பைக் வேண்டும் பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். தொல்லை தாங்கமுடியாமல் லோன் எடு... மேலும் பார்க்க

`தூங்க கூட நேரம் கிடைக்கவில்லை’ - தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையைக் கொன்ற தாய்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). ஷு கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு 5 வ... மேலும் பார்க்க

நெல்லை: 'வீட்டில ஒரு ரூபாய் இல்லை; இதுல இத்தன கேமரா!’ - கடுப்பான திருடன் எழுதி வைத்த கடிதம்!

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகி... மேலும் பார்க்க

கரூர் சம்பவம் : இரண்டாம் நாளாக சி.பி.ஐ முன்பு ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க கட்சி இந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விச... மேலும் பார்க்க