செய்திகள் :

'ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்' ; 'இல்லை, திறந்து தான் இருக்கிறது' - குழப்பும் ஈரான், அமெரிக்கா

post image

ஈரான் போரின் மையமாக மீண்டும் 'ஹார்முஸ் நீர்ச்சந்தி' மாறியுள்ளது.

ஹார்முஸ் இப்போது திறந்திருக்கிறதா... முடியிருக்கிறதா என்கிற கேள்வி, தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை அமெரிக்கா, ஈரானும் வெவ்வேறு விதமாக கூறிக்கொண்டிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறித் தாக்குதல் நடத்திகொண்டிருக்கின்றன.

இதற்கு அமெரிக்கா சொல்லும் காரணம், 'இது தற்காப்புத் தாக்குதல்' என்பதாகும். ஈரானோ, 'அமெரிக்கா தாக்குகிறது... பதிலுக்கு நாங்கள் தாக்குகிறோம்' என்கிறார்கள்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி
சரி... இப்போது ஹார்முஸ் நீர்ச்சந்தி பிரச்னைக்கு வருவோம். இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் கப்பற்படை வெளியிட்டுள்ள அறிக்கை...

"ஹார்முஸ் நீர்ச்சந்தி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.

அமெரிக்க எதிரிகளால் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து மீறப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீர்ச்சந்தி மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.

பெர்சிய வளைகுடா அல்லது ஓமன் வளைகுடாவில் நங்கூரமிட்டுள்ள எந்தவொரு கப்பலும் அங்கிருந்து நகரக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

ஹார்முஸ் நீர்ச்சந்தியை நெருங்குவது எதிரிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கருதப்படும்.

இந்த உத்தரவை மீறி, ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது".

ஈரான் கப்பற்படை அறிக்கைக்கு அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய கட்டளையகம் (CENTCOM) செய்துள்ள 'Fact Check' பதிவு இதோ...

"தகவல்: ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கொண்டாடுகிறது.

உண்மை: வணிகக் கப்பல்கள் இன்று இரவு கூட, ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகத் தடையின்றித் தொடர்ந்து சென்று கொண்டும், வந்து கொண்டும் இருக்கின்றன".

இரு தரப்பும் வேறு வேறு பதில்களை தந்து வருகின்றன. ஆனால், ஹார்முஸ் நீர்ச்சந்தியின் தற்போதைய நிலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?' டு 'எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க' தவிக்கும் மாண்புமிகு! | கழுகார்

பதக்கத்தால் வெடிக்கும் பஞ்சாயத்து!'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா..'தமிழக காவல்துறை பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்து, எந்தவித தண்டனையும் பெறாமல் தூய பணிக் காலத்தை கொண்ட காவல் அதிகாரிகளுக்கு, முதல்வர்... மேலும் பார்க்க

"சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?" - தூத்துக்குடி சம்பவத்திற்கு பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண்... மேலும் பார்க்க

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச... மேலும் பார்க்க

’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்... மேலும் பார்க்க

`எங்கள் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில்.!' - இந்திய ஊழியர்களை ஒரே மெயிலில் பணிநீக்கம் செய்த ஓபன்டோர்

உலகத்தையே தொழில்நுட்பம் ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அந்தத் தொழில்நுட்ப உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு வாக்கியம், இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள... மேலும் பார்க்க

கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்: '3 இந்தியர்கள் உயிரிழப்பு' - இந்திய அரசு என்ன சொல்கிறது?

ஓமன் வளைகுடாவில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் (Palau) கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் செட்டபெல்லோ மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம். அந்தக் கப்பலில் இருந்து மூன்று இந்தியர்களை... மேலும் பார்க்க