Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
325 ஊழியர்களுக்கும் ₹125 கோடி; ரியல் எஸ்டேட் துறையில் சகாப்தம் படைக்கும் டிஆர்ஏ ஹோம்ஸ்
325 ஊழியர்களுக்கும் ₹125 கோடி பணியாளர் பங்கு உரிமை மற்றும் ஊக்கத் தொகைகளை அறிவித்து, ரியல் ஸ்டேட் துறையில் புதிய சகாப்தத்தை படைத்த டிஆர்ஏ ஹோம்ஸ் (DRA HOMES).
இந்திய ரியல் எஸ்டேட் துறை இது வரை கண்டிராத வகையில், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பிரபலக் கட்டுமான நிறுவனமான டிஆர்ஏ ஹோம்ஸ் (DRA HOMES), ஓட்டுநர்கள் முதல் துறை தலைவர்கள் மற்றும் மூத்த மேலாளர் வரை என 325 உறுப்பினர்களைக் கொண்ட பணியாளர்களுக்கும் ரூ.125 கோடி மதிப்பிலான பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தை (ESOP) அறிவித்துள்ளது. இந்த முயற்சி, முன்னேற்றம் உண்மையில் பகிரப்பட்டால்தான் அர்த்தமுள்ளதாகும் என்ற நிறுவனத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது மற்றும் கூட்டமைப்புப் நலன் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற தத்துவத்தை நடைமுறையில் காட்டுகிறது.
நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் (ESOP) பொருந்தும் என்றும், அதன் முதல் கட்டமாக, டிஆர்ஏ ஹோம்ஸ் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட தகுதியுள்ள பணியாளர்களுக்கு பங்கு உரிமையை வழங்கியுள்ளது, மீதமுள்ளவை படிப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பயணத்தில் பங்களிக்கும் அனைவரும் அதன் வளர்ச்சியில் உண்மையான பங்குதாரராக மாறுவதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், இந்தியாவில் முதல் மற்றும் முன்னோடி திட்டம் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்துடன், அனைத்து ஊழியர்களுக்கும் ரூ 6 கோடி மதிப்பில் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகளையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் முழு நிதி உதவியுடன் ஊழியர்கள் சுற்றுலா செல்லும் வசதியை அறிவித்துள்ள இந்நிறுவனம் அதன் முதல் கட்டமாக வரும் 14-ந்தேதி 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வியட்னாமுக்கு செல்ல இருக்கிறார்கள். இந்த திட்டங்கள் அனைத்தும் ஊழியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதோடு, நன்றியுணர்வு மற்றும் பகிரப்பட்ட பெருமையின் கலாச்சாரத்தை வளர்க்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக, நிறுவனம் அதன் சென்னை தலைமை அலுவலகத்தில் "சமத்துவத்தின் பெருமைச் சுவரை" (PRIDE WALL OF EQUALITY) திறந்து வைத்தது, இதில் ஒவ்வொரு துறையின் பெயர்களும் எழுதப்பட்டு உள்ளது. டிஆர்ஏ-ன் உண்மையான அடித்தளம் சொத்தில் அல்ல, மக்கள் மீது உள்ளது என்ற அதன் நம்பிக்கையைக் குறிக்கும் வகையில் இந்தச் சுவர் இந்நிறுவனத்தின் சிறப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான சாட்சியாக நிறுவப்பட்டு உள்ளது.
இந்த புதுமை முயற்சிகள் குறித்து டிஆர்ஏ ஹோம்ஸ் நிர்வாக இயக்குனர் திரு ரஞ்சித் ரத்தோட் (Ranjeeth Rathod) கூறுகையில், “தலைமைத்துவம் பற்றிய எங்கள் கருத்து எங்களின் வணிக வளர்ச்சிக்கு மட்டுமல்ல, எங்கள் உடன் தொடர்புடைய அனைவரின் மகிழ்ச்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கும் பொறுப்பேற்பதிலும் உள்ளது. நாங்கள் அறிவித்துள்ள இந்த திட்டங்கள் எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பணியாளருக்கும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் ஊழியர்கள் உண்மையான உரிமையை உணரும்போது, வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.
இந்த அணுகுமுறை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி மனநிலையை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தின் சிறப்பான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது. மேலும் ரியல் எஸ்டேட் துறையில் புதியதொரு மாற்றத்திற்கும் டிஏஆர் வித்திட்டுள்ளது.
நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் காலத்தால் அழியாத மதிப்பு என்ற கொள்கைகளின் அடிப்படையில் துவக்கப்பட்ட டிஆர்ஏ ஹோம்ஸ், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும். வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்ப பெருமை, நோக்கம் மற்றும் நீண்டகால மதிப்புமிக்க திட்டங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



















