செய்திகள் :

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

post image

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர்.10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபென்ஜால் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது சுற்று டிராவில் முடிந்தது!

இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30-11-2024 முதல் 09-12-2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10-12-2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் 24X7 செயல்பட்டு வரும் மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் மற்றும் ஃபென்ஜால் (FENGAL) புயலை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள்

சென்னை: உணவு நிறுவன பணியாளா்களின் பணி நிபந்தனையில் திருத்தம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. பொதுக் கட்டடங்களுக்கு உரிமம் வழங்குதல், உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க உரிம ரத்து தீா்மானம்: பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை ... மேலும் பார்க்க

டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை

சென்னை: டயாலிசிஸ் சேவைகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை ஆலோசிப்பதற்காக, சிறப்பு நிபுணா் குழுவை அரசு அமைத்துள்ளது.தமிழகத்தில் தற்போது நாள்பட்ட சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அதிகரித்து வ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: சான்றிதழ்களை மீண்டும் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவா்கள் மீண்டும் அவற்றைப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களை தோ்வுத்துறை வழங்கியுள்ளது.இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழம... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு எப்போது?: அமைச்சா் பதில்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதிலளித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்ப... மேலும் பார்க்க

52 கோயில்களில் பழந்தமிழ் ஓலைச் சுவடிகள்-பட்டயங்கள் கண்டெடுப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: தமிழகத்தில் 52 கோயில்களிலிருந்து பழந்தமிழ் ஓலைச் சுவடிகள், பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வ... மேலும் பார்க்க