திருத்தணி: "எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா?...
BB Tamil 9: "ராஜ வேலைகள் எல்லாத்தையும் பார்க்கிற ஒரு குட்டி கனிதான் அரோரா" - விஜே பார்வதி சாடல்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 86 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர்.
மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் அரோரா குறித்து சாண்ட்ராவிடம் பார்வதி பேசிக்கொண்டிருக்கிறார்.
"எனக்கு அரோரா இன்னொரு கனி மாதிரிதான் தெரியுது. பேசுறதுல ஒரு இனிமை இருக்கும்.
பண்ற விஷயங்கள்ல ஒரு இண்டலிஜன்ட்ஸ் இருந்தாலும் அதுக்குப் பின்னாடி ஒரு கடுமையான வில்லத்தனம் இருக்கும்.
நம்மள மெண்டலி அட்டாக் பண்ணாங்கன்னா அதை மீறி வரதுக்கு டைம் எடுக்கும்.

நியாயமான காரணங்களை முன் வச்சு நேருக்கு நேர் போட்டி போடலாம். ஆனா பின்னாடி ஒரு விஷயத்தைப் பண்ணக்கூடாது.
ராஜ வேலைகள் எல்லாத்தையும் பார்க்கிற ஒரு குட்டி கனிதான்" என்று பார்வதி, அரோராவைச் சாடியிருக்கிறார்.












.jpeg)






