மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவே...
BB Tamil 9: 'ரொம்ப கடுமையா நடந்துக்குறாங்க' - திவ்யாவை குற்றம் சாட்டும் ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' டாஸ்க்கில் மேனேஜர் ஆக செயல்படும் திவ்யா கணேஷ் மீது ஹவுஸ் மேட்ஸ் குற்றம் சாட்டுகின்றனர்.

'பொறுமை தேவை, நிதானம் தேவை', 'ரொம்ப கடுமையாக நடந்துக்குறாங்க', 'நீங்க வந்து அப்படி என்ன பண்ணிட்டீங்க', 'டீமை எப்படி வழி நடத்தணும்'னு தெரியல' என ஹவுஸ் மேட்ஸ் திவ்யாவை பணிமாற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

















