Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft |Adani -க்காக மாற்ற...
BB Tamil 9: "Gameக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி" - சபரி, சாண்ட்ரா வாக்குவாதம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.
நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருக்கிறார்.
இன்று வெளியான முதல் இரண்டு புரொமோவிலும் அழுதுகொண்டுதான் இருந்தார்.
தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் சபரிக்கும், சாண்ட்ராவுக்கும் வாங்குவாதம் நடக்கிறது.

"நான் பயப்படுறேன், சிடு மூஞ்சி, கேம்முக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி எதுவேணாலும் சொல்லிக்கோங்க. உங்களுக்கு எதாச்சும் சொல்லணும்னு இருந்தா கேமரா கிட்ட சொல்லிக்கோங்க, இல்லனா குரூப்பா டிஸ்கஸ் பண்ணிக்கோங்க" என சபரியிடம் சொல்லி அழுகிறார்.


















