தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவ...
BB Tamil 9: "ஃபிராட்; விமர்சனத்தை ஏத்துக்க முடியாத ஒரு நபர்.!" - விக்ரமைச் சாடிய வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர்.
கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், வியானா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார். பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இந்த முறை அந்தப் பணப்பெட்டியில் பணத்தை சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
இரண்டாவது புரொமோவில் " இந்த கேமுக்கு பொருத்தமான ஒரு நபர் விக்ரம் தான்.
ஒருத்தவங்க மைண்ட்டை எப்படி மாத்தி விளையாடணும்'னு தெரிஞ்சு வச்சிருக்காரு.
இந்த சைடு விக்ரமை நான் இங்க விளையாடும்போது பார்க்கல" என வியானா விக்ரமை பற்றி சொல்ல அவர் 'My Game Is Done' என்று அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டு சென்றார்.

தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், "வக்ரம் விக்ரம் என்ற பேரும், முதலைக் கண்ணீர் என்ற பேரும் பொருந்தக்கூடிய ஒரு ஆள் நீங்க. உங்களுடைய நிறைய தவறுகள் சுட்டிக்காட்டப்படல.
ஃபிராட்ங்கிற வார்த்தை சரியா பொருந்தக்கூடிய ஒரு ஆள் நீங்க. அதேபோல இந்த வீட்டில விமர்சனத்தை ஏத்துக்கமுடியாத ஒரு நபரும் விக்ரம் தான்" என வியானா சாடியிருக்கிறார்.



















