Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
நிஜ வாழ்க்கையில் இணைந்த 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன் - விலாசினி!
தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் ஆதவன். 'ஆதித்யா' நகைச்சுவை சேனல் தொடங்கப்பட்ட போது அதில் தொகுப்பாளராக வந்து பிரபலமாகத் தொடங்கினார். 'கொஞ்சம் நடிங்க பாஸ்' இவருக்கு ரொம்பவே பெயர் தந்த நிகழ்ச்சி எனச் சொல்லலாம். அதற்கு முன் ரேடியோ தொகுப்பாளராக இருந்து 'ஆதித்யா'வுக்குத் தொகுப்பாளராக வந்தவர் விலாசினி. இவருக்குமே டப்பிங் கலைஞர் என்கிற இன்னொரு அடையாளமும் உண்டு.
'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' 'காக்கிச் சட்டை' ஆகிய படங்களில் நடிகை ச்ரி திவ்யா, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் ரெஜினா, 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நிவேதா பெத்துராஜ் ஆகியோருக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மைத்துனரின் மகளும் கூட.
ஆதவன், விலாசினி இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இருவரையும் அறிந்த சிலரிடம் இது குறித்துக் கேட்ட போது,
'ஆதவனுக்கு வேறோரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. விலாசினியும் விவாகரத்து ஆனவங்கதான். ரெண்டு பேருமே தங்களுடைய முதல் திருமண உறவிலிருந்து சட்டபூர்வமா வெளியேறிட்டாங்க.
இந்தச் சூழலில் ஒரே துறையில் இருப்பதால் கலை நிகழ்ச்சிகளின் போது ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்க, அதன் தொடர்ச்சியாக ரெண்டு பேருக்குமிடையில் ஒரு புரிதல் உண்டாகி அது திருமண வாழ்க்கையில் சேர்த்து வச்சிருக்கு' என்றார்கள் அவர்கள்.



















