80-ல் நுழைந்த ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரி...
BB Tamil 9: ``இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம்" - விக்ரம் - கனியின் ரகசியப் பேச்சு
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.
நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருந்தார்.
இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் விக்ரம் கனியிடம் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர்களின் உரையாடலில் கனி, `சாண்ட்ரா நான் இப்படிதான் விளையாடுவேன்... நான் பாத்துக்குறேன்னு சொல்றாங்க. அப்படி விளையாட முடியாதுல்ல..." என்கிறார்.
அதற்கு பதில் சொல்லும் விக்ரம், `அவங்க ஏதோ ஒன்னு பண்றாங்க. அது நமக்கு தெரியவரல அவ்ளோதான். அவங்க ஏதோ சிம்பதி ஓட்டு கிரியேட் பண்ணுறாங்க. கடைசி மூனுநாளா நீங்க அவங்களைப்பத்திதான் பேசிட்டு இருக்கீங்க. ஒருவேளை இதுக்காக கூட அவங்க இப்படி இருக்கலாம். அதனால இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம்" எனப் பேசுகிறார்.
















