செய்திகள் :

Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்

post image

`பிக்பாஸ் தமிழ் சீசன் 9'ல் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் திவாகர். `வாட்டர்மெலன் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் அந்த வீட்டிற்குள் சென்றிருந்தார் திவாகர். சமூகவலைதளப் பக்கங்களில் அவர் குறித்த பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.

திவாகர்

"இப்ப எல்லாரும் என்னை பிக்பாஸ் வாட்டர்மெலன் ஸ்டார், பிக்பாஸ் ஸ்டார்னு கூப்டுறாங்க. மக்கள் எப்படி கூப்டாலும் எனக்கு ஓகேதான்!" எனப் புன்னகைத்துவிட்டு தொடர்ந்து பேசினார்.

" பிக்பாஸ் ஓட்டிங்ல முதல் நான்கு வாரங்கள் நாம தான் முதல் இடத்தில் இருந்திருக்கோம். அதெல்லாம் எனக்கு வெளியில வந்த பிறகுதான் தெரியுது. நான் வீட்டுக்குள்ள எந்த இடத்திலும் மோசமான வார்த்தைகளை விடவே இல்ல. என்னை தான் கெட்ட வார்த்தையில் திட்டினாங்க, பாடி ஷேமிங் பண்ணினாங்க. அவங்க பேச பேசத்தான் நானும் எதிர்த்து பேச வேண்டியதா இருந்தது. அப்பவும் தகுதி தராதரம் பார்த்துப் பேசுங்கன்னு தான் சொல்லியிருந்தேன். இது கெட்ட வார்த்தையா எனக்குத் தெரியல. 

திவாகர்

கானா வினோத் என்னை ரொம்ப மோசமா நடத்தினார். அவர் பேசுறதை பொறுத்துக்க முடியாம தான் நான் பேசுனேன். சண்டைன்னு வர்றப்ப மத்தவங்க பேசுனதெல்லாம் மறைஞ்சிடுது. எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் திவாகர் தானே! எல்லார் கண்ணும் என் மேல தான் இருக்கு. அதனால நான் பேசுனது மட்டும் தெரியுது. வீட்டுக்குள்ள மோசமா நடத்துறாங்க, செய்யாததை செய்றேன்னு சொல்லிடுறாங்க. 

நீங்க நினைக்கிற மாதிரி கானா வினோத் எனக்கு சப்போர்ட் எல்லாம் இல்ல. விஜய் சேதுபதி சார் எங்க காம்போ நல்லா இருக்குன்னு சொல்லிட்டார். அது எதார்த்தமா பண்றப்ப நல்லா இருந்துச்சு. சார் சொன்ன பிறகு அவர் வேணும்னே சில விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டார். அவர் பாடும்போது நான் இடையில போய் கிண்டல் பண்ணல. ஆனா, நான் என் நடிப்புத் திறமையை காட்டும்போது அவர் கிண்டல் பண்ணினார். விஜய் சேதுபதி சார் சொன்னதுல இருந்துதான் கானா வினோத் ஓவரா பண்ண ஆரம்பிச்சார்!" என்றவரிடம் சாதி குறித்து பேசியது தொடர்பாக கேட்டோம்.

திவாகர்

" அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல. நான் பேசுனதா ஒரு வீடியோ ஆதாரம் காட்டுங்க ஒத்துக்கிறேன். நீங்க என் சொந்தக்காரங்களான்னு தான் கேட்டேன். எங்க ஊர் பக்கத்துல எல்லாரும் சொந்தக்காரங்களாகத்தான் பழகுவோம். எங்களுக்குள்ள ஏற்ற தாழ்வு எல்லாம் கிடையாது. நான் சொத்து பத்தி பேசினதெல்லாமே விளையாட்டா பேசுனதுதான். சபரி சொன்ன வார்த்தைகள் எல்லாம் வெளியில தெரியல. திவாகர் தானே ஃபேமஸ் அதனால தான் நான் விளையாட்டா பேசுனதை கூட எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. சொந்தமும் சாதியும் ஒண்ணு கிடையாது!" என்றவர் தொடர்ந்து பேசினார்.

"நான் எவிக்ட் ஆவேன்னு யாரும் எதிர்பார்க்கல. கானா வினோத் வீட்ல எனக்கு எதிராகத்தான் இருந்தார். அவர் பொய்யா அழுததை மக்கள் உண்மைன்னு நம்பிட்டு இருக்காங்க. 42 நாள் ப்ரொமோவுல அதிகம் வந்தது நான் தான்! சீரியல் நடிகர்கள் எல்லாரையும் பின்னாடி தள்ளிட்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு பிஆர் டீம் எல்லாம் கிடையாதுங்க. வீட்டுக்குள்ள போகும்போது என் ஃபோனை விஜய் டிவியில் தான் கொடுத்துட்டு போனேன். மக்கள் மனசை கொள்ளையடிச்சிட்டோம்னு எனக்கு சந்தோஷமா இருக்கு!" என்றார்.

திவாகர்

இன்னும் பல விஷயங்கள் குறித்து திவாகர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

BB Tamil 9: "ரொம்ப உடைஞ்சிட்டேன்; என்னால இங்க சர்வைவ் பண்ண முடியல"- அழுது புலம்பும் ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர்டெயின்மென்ட்?

அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்புகிறார்கள்.அதிலும் கிச்சன் டீ... மேலும் பார்க்க

BB Tamil 9: "வொஸ்ட் பெர்ஃபாமர் அவுங்க தான்" - அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 43: ‘திவாகர் போன பிறகுதான் தெளிவா இருக்கேன்’ - பாரு அதிரடி; நாமினேஷன் சடங்கு

‘வந்தவளும் சரியில்ல.. வாய்ச்சவளும் சரியில்ல’ என்று ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் புலம்புவார் ஜனகராஜ். அதைப் போல, பழைய போட்டியாளர்களும் சரியில்லை, புதிதாக வைல்ட் கார்டில் வந்தவர்களும் சரியி... மேலும் பார்க்க

'ஹீரோவா வேற யாரும் கிடைக்கலயா'னு கேட்டிருக்காங்க’- 1000 எபிசோடு மகிழ்ச்சியில் 'ஆனந்த ராகம்' அழகப்பன்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்தராகம்' சீரியல் இன்று ஆயிரமாவது எபிசோடை எட்டியுள்ளது.வாழ்த்துச் சொல்லி தொடரின் ஹீரோ அழகப்பனிடம் பேசினோம்.''காரைக்குடிப் பக்கத்துல இருக்கிற கொத்தமங்கலம் எங்க ஊரு. நா... மேலும் பார்க்க