செய்திகள் :

Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!

post image

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து நிதீஷ் குமார் தலைமையில் புதிய அரசு வரும் 20ம் தேதி பதவியேற்கிறது. இன்று தற்போதைய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வரும் 19ம் தேதி பீகார் சட்டமன்றத்தை கலைக்கும்படி அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர் நிதீஷ் குமார் ஆளுநர் ஆரிப் கானை சந்தித்து சட்டமன்றத்தை கலைக்க அமைச்சரவை எடுத்த முடிவை முறைப்படி தெரிவித்தார்.

வரும் 20ம் தேதி நிதீஷ் குமார் புதிய முதல்வராக 10-வது முறையாக பதவியேற்கிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இதற்கான விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இதற்காக காந்தி மைதானம் இன்றே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு ஏற்பாடுகள் தொடங்கி இருக்கிறது. 20ம் தேதி விழா முடிந்த பிறகுதான் மைதானத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூடி நிதீஷ் குமாரை தங்களது சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர்.

புதிய அமைச்சரவையில் பா.ஜ.கவிற்கு 16 அமைச்சர்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு முதல்வர் பதவியும், 14 அமைச்சர் பதவியும் கிடைக்க இருக்கிறது. இது தவிர பா.ஜ.கவிற்கு ஒரு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு லோக் ஜன்சக்தி கட்சிக்கு 3 அமைச்சர் பதவியும் கிடைக்க இருக்கிறது. இதில் ஒரு துணை முதல்வர் பதவியும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு; கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா?

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஆர்.பி.உதயகுமார்-பி... மேலும் பார்க்க

`ரூ.250 கோடி சொத்து; அரண்மனை வீடு; மதுபான ஆலை பணம்' - வைகோ குறித்து மல்லை சத்யா `பகீர்'

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உ... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க