DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!' அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை
Bihar Election Results Live: பீகாரில் வெற்றி யாருக்கு? முதல்வர் மாற்றம் வருமா? நாளை வாக்கு எண்ணிக்கை!
பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டு கட்ட (நவம்பர் 6, 11) வாக்குப்பதிவுகளும் முடிந்துவிட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.08 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.76 சதவிகிதமும் என மொத்தமாக 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பீகார் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் பதிவான வாக்கு சதவிகிதம் இதுதான்.
2005-க்குப் பிறகு சுமார் 20 வருடங்களாக எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களைக் கொண்டிருந்தாலும் நிதிஷ் குமார்தான் முதல்வராக இருப்பதால் இம்முறை மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பை இத்தேர்தல் உருவாக்கியிருக்கிறது.

ஆனால், கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்திலும் நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றன.
மறுபக்கம், ``கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் ஒரு உளவியல் அழுத்தம். மாற்றம் உறுதி, 18-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும்" என்று நம்பிக்கையோடு இருக்கிறார் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ்.

இதற்கிடையில், ஜன் சுராஜ் என்ற தனிக்கட்சி தொடங்கித் தனித்துக் களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை ஓரிரு இடங்களில் தான் அவரின் கட்சி வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இவையனைத்துக்கும் மக்களின் அதிகாரப்பூர்வ பதில் நாளை தெரியும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நேரலையாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள இப்பக்கத்தில் இணைந்திருங்கள்.

















