உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
Career: பிசினஸ் தொடங்கப்போகிறீங்களா... உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய 7 கேள்விகள்!
இப்போது மக்கள் வேலைக்குச் செல்வதை விட, 'பிசினஸ்' செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பிசினஸில் ஆர்வம் என்று எடுத்த உடனேயே, கண்ணை மூடிக்கொண்டு பிசினஸ் செய்வதற்கு இறங்கிவிடக்கூடாது. உங்களிடம் நீங்களே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
அது என்னென்ன கேள்விகள் என்று நமக்குப் பட்டியலிடுகிறார் See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த்.
1. நான் களமிறங்கப்போகும் துறை என்ன? அதில் நான் தேர்ந்தெடுக்கப்போகும் தொழில் என்ன?

2. அந்தத் துறையில் அந்தத் தொழிலில் தீர்க்கப்படாத பிரச்னை என்ன?
3. அந்தப் பிரச்னையைத் தீர்க்க எதாவது ஒரு பொருளையோ, சேவையையோ நான் உருவாக்க முடியுமா?
4. என்னுடைய தீர்வு பிறரை ஈர்க்கவைப்பதாக இருக்கிறதா; இதே மாதிரியான தீர்வை வேறு எதாவது போட்டியாளர்கள் வைத்திருக்கிறாரா?
5. ரிஸ்க் எடுக்கக்கூடிய திறன் என்னிடம் இருக்கிறதா?
6. தொழிலின் வெற்றி தாமதமாகினாலும், அதுவரை என்னால் பொறுத்திருக்க முடியுமா?

7. ஒருவேளை, வெற்றி தாமதம் ஆகும்போது, குடும்பத்திற்கான நிதி தேவைகளைப் பார்த்துக்கொள்ள என்னிடம் என்ன இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் பதிலிருந்தால், உங்களது பிசினஸில் இனி 'ரைட் போலாம்' தான்.
ஆல் தி பெஸ்ட் மக்களே!
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks