செய்திகள் :

Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?

post image

Doctor Vikatan: என் வயது 39. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 6 மாதங்களாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) எடுத்துக்கொள்வது ஒருவரது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு. தில்லைவள்ளல்

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

சில வகை ரத்த அழுத்த மாத்திரைகள், தாம்பத்ய வாழ்க்கையை ஓரளவுக்கு பாதிக்கலாம். ஆனால், இது அனைவருக்கும் அல்லது அனைத்து மாத்திரைகளுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

சில பிபி மாத்திரைகள் உடலின் ரத்த ஓட்டத்தையும் ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு (ED - Erectile Dysfunction) அல்லது பாலியல் ஆர்வம் குறைவு ஏற்படலாம்.

பெண்களுக்கு பாலியல் உந்துதல் குறைவு அல்லது பெண் உறுப்பில் வறட்சி (Dryness) ஏற்படலாம். சிலருக்கு மாத்திரைகளால் மனச்சோர்வு, மன அழுத்தம், அல்லது படபடப்பு காரணமாகவும் மறைமுகமாகப் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படலாம்.

நீண்ட காலமாகப் பயன்படுத்தும் பிபி மருந்துகள், பொதுவாகப் பாலியல் செயல்பாட்டை பாதிக்கலாம். நவீன மருத்துவ முன்னேற்றத்தில் கிடைக்கும் புதிய வகை பிபி மருந்துகள் பாலியல் ஆர்வத்தையோ, செயல்பாட்டையோ பாதிக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் கிடைக்கின்றன.

ஒருவேளை, பிபி மாத்திரைகளால் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிப்பது மிக முக்கியம்.

மாத்திரைகள்
மாத்திரைகள்

நீங்களாகவே மருந்துகளை நிறுத்தவோ அல்லது கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடவோ கூடாது. மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, வேறு மருந்துகளைப் பரிந்துரைப்பார். தவிர, சிலருக்கு பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தவும் சில சிறப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.

மருந்துகளால் அல்லாமல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தலாம். அந்த வகையில், பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், நட்ஸ், சியா மற்றும் பூசணி விதைகள், கொழுப்புள்ள மீன் (Fatty Fish), முட்டை, இறைச்சி, கடல் உணவுகள், காளான்கள், கீரை மற்றும் பச்சைக் காய்கறிகள், டார்க் சாக்லேட், மாதுளை, தர்பூசணி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, துத்தநாகம் (Zinc) சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

பேக்கரி உணவுகள், அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை, சோடியம் (உப்பு) மற்றும் எண்ணெய் நிறைந்த வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மன அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். பிடித்த வேலைகளைச் செய்வது மகிழ்ச்சியைத் தரும்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

வொர்க் - லைஃப் பேலன்ஸ் கடைப்பிடிக்கப்பட வேண்டும். போதுமான அளவு தூக்கம், குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவை அவசியம். புகை மற்றும் மதுப் பழக்கங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நாள்பட்ட நோய்கள், ஆண் உறுப்பில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், இதற்குச் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? - மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்

மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்ட... மேலும் பார்க்க

Marburg Virus: எத்தியோப்பியாவில் பரவும் மார்பர்க் வைரஸ்; உலக சுகாதார அமைப்பு விளக்கம்

தெற்கு எத்தியோப்பியாவில் 'மார்பர்க்' என்ற கொடிய வைரஸ் பரவி வருவதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?

Doctor Vikatan: நான் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறேன். கிலோமீட்டர் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் பலரும், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ், 12 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதாகச் ... மேலும் பார்க்க

நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!

உணவுக்குழாய்க்கு வருகிறது!இரைப்பையில் இருக்க வேண்டியவை'' 'டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது' என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலைவலியே இல்லாவிட்டாலும் தினமும் தைலம் தடவும் வழக்கம், பிரச்னை வருமா?

Doctor Vikatan: என் வயது 53. எனக்கு தினமும் தலைவலி தைலம் தடவிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வலி இருக்கிறதோ, இல்லையோ, அதைத் தடவிக்கொண்டுதூங்கினால்தான்திருப்தியாக உணர்வேன். இந்தப் பழக்கத்தினால்ஏதேனும் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: வயதுக்கேற்ற உயரம் இல்லாத டீன் ஏஜ் மகள்; 15-16 வயது பிறகு வளர்ச்சி நின்றுவிடுமா?

Doctor Vikatan: டீன் ஏஜில் இருக்கும் என் மகளுக்கு அந்த வயதுக்கேற்ற உயரம் இல்லை. 15-16 வயதுக்குப் பிறகு வளர்ச்சி நின்றுவிடும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா... வயதுக்கேற்ற உயரத்தைப் பெற ஏதேனும் வழிகள்... மேலும் பார்க்க