செய்திகள் :

Doctor Vikatan: பிரபலங்கள் சொல்லும் 'பீட்ரூட் ஜூஸ்' சீக்ரெட்... கிட்னி ஸ்டோன் வருமா?!

post image

Doctor Vikatan: இன்று சமூக வலைதளங்களில் இன்ஃப்ளுயென்ஸர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரும் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதாகவும் அதுதான் அவர்களது இளமைத் தோற்றத்துக்கான காரணம் என்றும் சொல்வதைப் பார்க்கிறோம். அதே சமயம், பீட்ரூட் ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இவற்றில் எது உண்மை...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

அருண் கல்யாணசுந்தரம்

பீட்ரூட் என்பது சத்துகள் நிறைந்த காய்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை யார் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வரையறை தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து மிக அதிகம் என்பதால், அது உடலில் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படும். அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும். அதனால் இதயநலன் மேம்படும். மூளையின் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது இது. பீட்ரூட்டிற்கு அந்த அடர் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது 'பீட்டலைன்' (Betalain) என்ற சத்து. இது வெறும் நிறமி மட்டுமல்ல, நம் உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான பாதுகாப்புக் கவசம். இதற்கு ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் உண்டு. 

நமது உடல் இயந்திரம் இயங்கும்போது, செல்கள் சில சேதங்களைச் சந்திக்கும் இதை 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' என்பார்கள். நம் செல்கள் சிதைவடையாமல் தடுக்கும் வேலையை இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செய்கின்றன.  உடலில் ஏற்படும் உள் காயங்கள் மற்றும் வீக்கங்களைக் குறைக்கும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி குணங்களையும் கொண்டது பீட்ரூட்.

சருமம் பளபளப்பாக மாற வேண்டும் என விரும்புவோருக்கு பீட்ரூட் ஜூஸ் நிச்சயம் உதவும்.

சருமம் பளபளப்பாக மாற வேண்டும் என விரும்புவோருக்கு பீட்ரூட் ஜூஸ் நிச்சயம் உதவும். விளையாட்டுத்துறையில் ஈடுபடுவோருக்கு உடல் திறனை அதிகரிக்கவும் பீட்ரூட் ஜூஸ் உதவுவதாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாடுவதற்கு அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு 2-3 மணி நேரம் முன்னதாக பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். காலையில் ஒரு டம்ளர் அளவுக்குக் குடிக்கலாம்.

பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது, சிறுநீரின் நிறம் லேசான சிவப்பாக மாறுவது இயல்புதான். எனவே, அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அதே சமயம், அளவுக்கதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகும் ஆபத்தும் இருக்கிறது. தவிர, வயிற்று உப்புசம், வாய்வுத் தொந்தரவு போன்றவையும் வரலாம். ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், பீட்ரூட் ஜூஸை தவிர்ப்பது அவசியம். 

எனவே, பிரபலங்களும் சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்ஸர்களும் சொல்வதைக் கேட்டு, எந்தச் சிகிச்சையையும் உணவுப்பழக்கத்தையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல், மருத்துவ ஆலோசனையோடு பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

இளம்பெண்களிடையே டிரெண்ட் ஆகும் 'Gel Nails'; பயன்படுத்தலாமா? சூப்பர் டிப்ஸ் இதோ!

ஃபேஷன் மற்றும் அழகு காரணங்களுக்காக இளம்பெண்களிடையே சமீபத்தில் டிரெண்டு ஆகி வருகிறது, 'ஜெல் நகங்கள்'. இந்த ஜெல் நகங்களைப் பயன்படுத்தலாமா... கூடாதா என்பதை விளக்குகிறார் சரும நோய் மற்றும் அழகுக்கலை நிபுண... மேலும் பார்க்க

Workout செய்ய நினைச்சாலே ஸ்ட்ரெஸ் ஆகுதா? இருக்கவே இருக்கு சிம்பிள் டெக்னிக்ஸ்!

பலருக்கும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆர்வம் அதை செயல்படுத்துவதில் காணாமல் போய்விடும். இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நிறைந்து வழியும் ஜிம... மேலும் பார்க்க

Doctor Vikatan: Flax Seeds எனப்படும் ஆளி விதை; அப்படியே சாப்பிடுவது சரியானதா?

Doctor Vikatan: என்னுடைய தோழி ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளைப்பொடித்துவைத்துக்கொண்டு தினமும் சமையலில் சேர்ப்பதாகச்சொல்கிறாள்.ஆனால், ஆளி விதைகளைஅப்படியே சாப்பிடுவதாகநிறைய பேர் சொல்லிக் கேட்டிரு... மேலும் பார்க்க

'உங்கள் உடல் steady-ஆக இருக்கிறதா?' தெரிந்துகொள்ள ஒற்றைக்காலில் நில்லுங்கள்! |#Flamingo balance test

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக டிரெண்டாகி வருகிறது 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' (Flamingo balance test).வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு ஒற்றைக்காலில் நின்றிருப்பீர்கள், வென்றிருப்பீர்கள். உங்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்... இளமைத் தோற்றம் தருமா?

Doctor Vikatan: சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க்குகள் உண்மையில் பயனுள்ளவையா... அவற்றை இரவு முழுவதும் முகத்திலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதா... மேலும், அவை 'கிளாஸ் ஸ்கின்... மேலும் பார்க்க

`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A

தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது 'பறவைக் காய்ச்சல்'. இதனால், 'சிக்கன் சாப்பிடக் கூடாது..', 'பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்' போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது. மக... மேலும் பார்க்க