செய்திகள் :

Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?

post image

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன.  பீரியட்ஸ் தள்ளிப்போகும் போதெல்லாம் பிரெகன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் காட்ட வாய்ப்பிருக்கிறதா? வேறு எந்த விஷயங்களை எல்லாம் இதில் கவனிக்க வேண்டும்?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

கர்ப்பத்தை உறுதிசெய்ய சிறுநீர்ப் பரிசோதனைதான் செய்யப்படும். அந்தப் பரிசோதனையில், ரத்தத்தில் ஹெச்.சி.ஜி (Human Chorionic Gonadotropin) என்ற ஹார்மோன் இருக்கிறதா, இல்லையா என்பதைக் காட்டிக் கொடுக்கும். ஆனால், அதில் ஹெச்.சி.ஜி அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் காட்டாது.

கர்ப்பம் தரித்ததும் உடலில் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் உருவாகும். அதாவது கரு பதியத் தொடங்கிய பிறகு, இது ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு நிகழ்ந்த 6 முதல் 10 நாள்கள் கழித்து, கர்ப்பம் தரித்திருந்தால் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் உற்பத்தியாவது நடக்கும்.

உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது 28 நாள்களுக்கொரு முறை சரியாக வருவதாக வைத்துக்கொள்வோம். கடந்த மாதம் 14-ம் தேதி பீரியட்ஸ் வந்திருந்து, அடுத்த மாதம் அதே தேதியில் வராவிட்டால், 15-ம் தேதியன்று நீங்கள் டெஸ்ட் செய்து பார்க்கலாம். அதற்கு முன்பு டெஸ்ட் செய்து பார்ப்பதில் அர்த்தமில்லை.

கர்ப்பம்
கர்ப்பம்

எப்போதுமே காலையில் வெளியேற்றும் முதல் சிறுநீரை எடுத்துதான் இந்த டெஸ்ட்டை செய்யச் சொல்வோம். அந்தச் சிறுநீர் அடர்த்தியாக இருக்கும். அதில் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும்.

கர்ப்பம் தரித்திருந்தால், இந்த டெஸ்ட்டில் 97  முதல் 99 சதவிகிதம் துல்லியமாகச் சொல்லிவிடும். அதை 'சென்சிட்டிவிட்டி' (Sensitivity) என்று சொல்வோம்.

அடுத்து ஸ்பெசிஃபிசிட்டி (Specificity). அதாவது டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வந்தால், அது  கர்ப்பம் தரித்திருப்பதை 99 சதவிகிதம் உறுதிசெய்கிற விஷயத்தை  ஸ்பெசிஃபிசிட்டி என்று சொல்வோம்.

அடுத்து 'ஃபால்ஸ் நெகட்டிவ்' (False negative) என்றொரு விஷயம் குறிப்பிடுவோம். அதாவது கர்ப்பம் இருக்கிறது, ஆனால் இல்லை... என்பதைக் குறிப்பது. இப்படிக்கூட நடக்குமா என்றால், அதற்கு 1 முதல் 2 சதவிகித வாய்ப்பு இருக்கிறது.

ரத்தப் பரிசோதனை
ரத்தப் பரிசோதனை

ரொம்பவும் சீக்கிரமே டெஸ்ட் செய்யும்போதோ, முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்களுக்கோ, நிறைய தண்ணீர் குடித்ததன் விளைவாக, சிறுநீர் ரொம்பவும் நீர்த்திருந்தாலோ, டெஸ்ட் செய்யத் தெரியாவிட்டாலோ, இப்படி நடக்கலாம். அல்லது பிரெக்னன்சி டெஸ்ட் கிட்டில் ஏதேனும் கோளாறு இருப்பதும் காரணமாகலாம். 

அதே போல 'ஃபால்ஸ் பாசிட்டிவ்' (False positive) என்றும் காட்டலாம். அதாவது கர்ப்பம் இல்லை, ஆனால் இருப்பதாகக் காட்டும். இதற்கும் கிட் பிரச்னையால் நிகழலாம். குழந்தையின்மை சிகிச்சையில் இருப்போர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவாக இருக்கலாம். கருச்சிதைவின் காரணமாக இருக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

``500+ மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் செய்துள்ளோம்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் நலன் குறித்த கவலைகள் இன்று அதிகரித்தவண்ணம் உள்ளன. 'வரும் முன் காப்போம்' என்பதற்கேற்ப முறையான விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ந... மேலும் பார்க்க

Doctor Vikatan: ``குழந்தையின் அப்பா யார்?'' - DNA டெஸ்ட் உறுதிசெய்யுமா? எப்படி செய்யப்படுகிறது?

Doctor Vikatan: திருமணம் தாண்டிய உறவுகளிலும், திருமணமாகியிருந்தநிலையிலும்கூட, இருவருக்குப் பிறக்கும் குழந்தையை தனதல்ல எனஅந்த ஆண்மறுக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்க்கிறோம். அப்போதெல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதிக ரத்த அழுத்தம்தானே ஆபத்து, ரத்த அழுத்தம் குறைந்தாலும் பிரச்னையா?

Doctor Vikatan: பொதுவாக ஒருவருக்கு பிபி எனப்படும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைத்தானே ஆபத்தான அறிகுறியாகச் சொல்வோம்.ஆனால், சிலர், குறைந்த ரத்தஅழுத்தமும் பிரச்னைக்குரியது என்கிறார்களே. அது உண்மையா?பதி... மேலும் பார்க்க

மைக்ரேன் கஷாயம், சைனசைடிஸ் லேகியம், இருமலுக்கான பசும்பால் - மரு. சிவராமன் சொல்லும் தீர்வு!

தலைவலி என்றாலே அது தாங்க முடியாததுதானே... பலரையும் பாதிக்கிற இதற்கு சில சித்த மருத்துவ தீர்வுகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..!இது மைக்ரேன் கஷாயம்! ’த... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலைச்சுற்றல் பிரச்னை, ஏன் இ.என்.டி மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு கடந்த ஒரு வருடமாக தலைச்சுற்றல் பிரச்னை இருக்கிறது. மருத்துவரை அணுகியபோது , இது வெர்டிகோ பாதிப்பாக இருக்கலாம் என்றும்இ.என்.டி மருத்துவரைப் பார்க்கும்படியும் சொன்னார். தல... மேலும் பார்க்க

Non Veg: வாரத்துக்கு எத்தனை முறை சாப்பிடலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம்

'அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா?' விளக்கமளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன். Non Vegஅசைவ உணவுகள் நல்லவையா?"அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்க... மேலும் பார்க்க