செய்திகள் :

Friends: `இந்தப் படத்தில் ஹீரோ யார் என்றே தெரியாது!’ - இயக்குநர் பேரரசு

post image

இயக்குநர் சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃப்ரண்ட்ஸ்'.

இந்தப்படம் வரும் நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில் மீண்டும் வெளியாகிறது.

இந்த படத்துக்கான புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவ. 17) நடைபெற்றது.

'ஃப்ரண்ட்ஸ்' படத்தில்
'ஃப்ரண்ட்ஸ்' படத்தில்

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, " எந்தப் படங்களை சொன்னாலும் எனக்கு முதலில் கதை ஞாபகத்திற்கு வரும்.

ஆனால் ஃப்ரண்ட்ஸ் படத்தில் கதை ஞாபகத்திற்கு வராது. அதில் இடம்பெற்ற காமெடிகள் தான் ஞாபகத்திற்கு வரும்.

அந்த அளவிற்கு இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடி இடம் பெற்றிருக்கும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் சித்திக் சார் மிகப்பெரிய இயக்குநர்.

ஒரு ஆக்ஷன் படத்தையோ, லவ் படத்தையோ ஈசியாக எடுத்திடலாம். சென்ட்டிமென்ட் படங்களை எடுத்து மக்களை அழ வைத்துவிடலாம். இதை அனைத்தும் ஒரு இயக்குநர் எளிதாக பண்ணிவிடலாம்.

ஆனால் ஒரு காமெடி படம் எடுப்பது ரொம்ப கஷ்டம். ஏன்னென்றால் காமெடியில் டைமிங் ரொம்ப முக்கியம்.

'ஃப்ரண்ட்ஸ்' படத்தில் எல்லா காமெடியும் டைமிங்கில் இருக்கும்.

மிகப்பெரிய வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ராதா ரவி சாரை இந்தப் படத்தில் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். அவரையும் இந்தப் படத்தில் காமெடியனாக்கி வைத்திருப்பார்கள்.

 பேரரசு
பேரரசு

மேலும் இந்தப் படத்தில் ஹீரோ யார் என்றே தெரியாது. எல்லாரும் ஸ்கோர் பண்ணிருப்பார்கள்.

மலையாள இயக்குநர்கள் ரொம்ப தெளிவாக இருப்பார்கள். ஒரு கதையில் யார் என்ன பேச வேண்டும் என்பதை சரியாக வைத்திருப்பார்கள்.

கதைக்கு தேவையானதை மட்டும்தான் செய்வார்கள். நான் அவர்களுடன் எல்லாம் பணியாற்றி இருக்கிறேன்.

அதேபோல் தான் 'ஃப்ரண்ட்ஸ்' படத்தை சித்திக் இயக்கி இருக்கிறார். எங்க பார்த்தாலும் நேசமணி கதாபாத்திரம் டிரெண்டிங்கில் இருக்கிறது.

புதிய படங்கள் ரிலீஸ் செய்வதே கடினமாக இருக்கிறது. இதில் ஒரு படத்தை ரீ-ரிலீஸ் செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.

படம் தரமானதாக இருந்தால் மட்டும்தான் ரீ-ரிலீஸ் செய்ய முடியும். அந்தவகையில் 'ஃப்ரண்ட்ஸ்' ஒரு தரமான படம்" என்று பேரரசு பேசியிருக்கிறார்.

Kayadu Lohar: ``என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” - நடிகை கயாடு லோஹர் வேதனை

2021ம் ஆண்டு வெளியான 'முகில்பேட்டே' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதன் பிறகு 'பதோன்பதம் நூட்டாண்டு' என்ற மலையாள படத்திலும், 'அல்லூரி' என்ற தெலுங்கு படத்திலும், '... மேலும் பார்க்க

"உங்க லாயல்டிக்கு ஒரு சின்ன கிஃப்ட்"- இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் 'கோமாளி' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்... மேலும் பார்க்க

"`சாவா' பிரசார படம்னு தெரியும்; அதான் நடிக்கல" - 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்த கிஷோர்

ஹீரோ, வில்லன், நேர்மறையான விஷயங்களை நிகழ்த்தக்கூடிய குணச்சித்திர கதாபாத்திரங்கள் என அனைத்திற்கும் சரியாகப் பொருந்திப்போகக்கூடியவர் நடிகர் கிஷோர். தனக்குக் கொடுக்கப்படும் அத்தனை கதாபாத்திரங்களையும் பக்... மேலும் பார்க்க

Bose Venkat: ``நான் அப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்'' - தன் ஆசான் குறித்து மனம் திறந்த போஸ் வெங்கட்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் அவருக்கு நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெ... மேலும் பார்க்க

Friends : `அஜித், சினிமால இருக்கற யாரையும் லவ் பண்ணிடாத, புரியுதா?’ - ரமேஷ் கண்ணா செய்த கலாட்டா!

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ். இந்தப்படம் வருகின்ற நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில் மீண்டும் வெளியாகிறது.இந்த பட... மேலும் பார்க்க