செய்திகள் :

Gambhir: "வீரர்களைக் கையாண்ட விதத்தில் கம்பீர் தவறு செய்திருக்கிறார்" - சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்

post image

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார்.

குறிப்பாக சஞ்சு சாம்சன் கையாளப்பட்ட விதம் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திருக்கிறார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர், "5 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து மிகச்சிறந்த ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனை, மிடில் ஆர்டரில் களமிறக்கியது மிகப்பெரிய தவறு.

டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில் நன்றாக விளையாடினார் என்பதற்காக, டி20-யில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சாம்சனை ஓரங்கட்டியதும் தவறுதான்.

பேட்டிங்காக இருந்தாலும் சரி, பவுலிங்காக இருந்தாலும் சரி வாஷிங்டன் சுந்தரை மட்டுமே தீர்வாக கம்பீர் பார்த்தார். அக்ஷர் படேலை விட சுந்தருக்கு முக்கியத்துவம் கொடுத்தது தேவையற்ற முடிவு.

இந்திய அணி ஒரு கட்டத்தில் தோற்கும் நிலையில் இருந்தது. சில தற்செயலான நிகழ்வுகளால் சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்து இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்தது.

கம்பீர்
கம்பீர்

ஒட்டுமொத்தமாக வீரர்களைக் கையாண்ட விதம், பேட்டிங் வரிசையை மாற்றிய விதம் எனக் கம்பீர் பல தவறுகளைச் செய்திருக்கிறார்" எனச் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார்.

T20 WC: `இந்திய அணி ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டது' பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்

டி20 உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்றிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்து பேசியிருக்கிறார். விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோயப் அக்தர், "இது தெரு ஒன்றி... மேலும் பார்க்க

T20 WorldCup: "ஜிம்​பாப்வே போட்​டிக்கு முன்​பாக கம்​பீர் என்னிடம் அதைச் சொன்னபோது..."- சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் ரன்களைக் குவித்து அ... மேலும் பார்க்க

T20 World Cup: `மீண்டும் டீ கப் புகைப்படம்' - வருண் சக்ரவர்த்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்!

2026 T20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு, வருண் சக்ரவர்த்தி மீண்டும் நகைச்சுவையாக ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.T20 உலகக் கோப்பையை இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 96 ரன்கள் வித... மேலும் பார்க்க

T20 WC: "என்னைபோல இந்த தருணத்திற்காக நீயும் ஆசைப்பட்டாய்.!"- மனைவிக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிரடி காட்டிய ... மேலும் பார்க்க

T20 WC: இந்திய தேசத்தின் சொத்து; எதிரணியினருக்கு சிம்ம சொப்பனம் - பும்ரா ஒரு தலைமுறைக்கான பௌலரே!

2024 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் விராட் கோலி பும்ராவை ‘இந்திய நாட்டின் சொத்து’ என்று பாராட்டி இருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து அதே வார்த்தைகளில் மீண்டும் பும்ராவை ஏகத்துக்கும் புகழ்ந்... மேலும் பார்க்க

IND Vs NZ: `கார் விபத்தில் என் சகோதரியை இழந்துவிட்டேன்; இந்த வெற்றியை...' - இஷான் கிஷன் எமோஷனல்

அகமதாபத்தில் நேற்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையைச் சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் ம... மேலும் பார்க்க