செய்திகள் :

Golden Toilet: ``101 கிலோ தங்கத்தில் டாய்லெட்'' - ரூ.100 கோடிக்கு வாங்கியவர் என்ன சொல்கிறார்?

post image

நியூயார்க்கில் நடந்த ஒரு ஏலத்தில், 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் கோப்பை, சுமார் 12.1 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி) விற்பனையாகியுள்ளது.

பிரபல இத்தாலிய கலைஞர் மௌரிசியோ கேடலான் என்பவரால் இந்த தங்க டாய்லெட் உருவாக்கப்பட்டது. விசித்திரமான கலைப்படைப்புகளுக்கு பெயர் பெற்ற இவர், இதற்கு முன்பு, சுவரில் வாழைப்பழம் ஒன்றை டேப் போட்டு ஒட்டி அதை ஒரு கலைப்படைப்பாக விற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

Golden toilet

இந்த டாய்லெட் வெறும் தங்க முலாம் பூசப்பட்டது அல்ல. சுமார் 101 கிலோ எடையுள்ள, 18 காரட் திட தங்கத்தால் ஆனது என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது ஒரு சாதாரண டாய்லெட் போலவே முழுமையாக செயல்படும் திறன் கொண்டது.

நியூயார்க்கில் உள்ள சோதபி ஏல மையத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த டாய்லெட் ஏலம் விடப்பட்டது. இதனை 'ரிப்லீஸ் பிலீவ் இட் ஆர் நாட்' (Ripley's Believe It or Not!) என்ற புகழ்பெற்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

விசித்திரமான பொருட்களை சேகரிக்கும் இந்த அருங்காட்சியகம், இந்த தங்க டாய்லெட்டை தங்களது சேகரிப்பிலேயே மதிப்புமிக்க பொருளாக அறிவித்துள்ளது. விரைவில் இது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஆந்திரா: பருவமடைந்ததால் மகளை வீட்டில் பூட்டி வைத்த தாய்; 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு;என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள இச்சாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் தனது மகளுடன் மூத்த சகோதரன் வீட்டில் தங்கி இருந்தார். இவரது மகள் கடந்த 2022ம் ஆண்டு பருவம் அடைந்தார... மேலும் பார்க்க

`அம்மா என்னை மன்னித்து விடுங்கள்'- டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குதித்து மாணவர் விபரீதம்

டெல்லியில் பிரபல பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், அங்குள்ள ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்து இருப்பதாக அவரது தந்தைக்கு மர்ம நபர் போன் செய்தார். ... மேலும் பார்க்க

AI போட்டோ காட்டி Zomato-வில் refund கேட்ட பெண் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பேக்கரி!

மும்பையைச் சேர்ந்த 'டெசர்ட் தெரபி' என்ற பிரபலமான பேக்கரியில், அதிதி சிங் என்ற பெண் ₹2,500 மதிப்புள்ள 'ஆல்மண்ட் பிரலைன் ஸ்ட்ராபெர்ரி டார்க் சாக்லேட்' ஒன்றை சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி ச... மேலும் பார்க்க

மறைந்த தந்தையின் வங்கி கடன்; ரூ.18 லட்சம் ரூபாய் கேட்கும் அதிகாரிகள் - செய்வதறியாமல் தவிக்கும் மகன்

பெங்களூருவைச் சேர்ந்த நபரின் தந்தை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது வங்கிக் கணக்குகளை முடிப்பதற்காக தாயுடன் எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்ற... மேலும் பார்க்க

``30 வயதில் கைவிட்ட காதலன் என்ன செய்வேன்?'' - புலம்பிய பெண்; ஆலோசனை சொன்ன நெட்டிசன்கள்

சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்த பிறகு காதலர்களிடையே பிரேக்கப் ஆவது அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பேசி முடிக்கும் போது எதாவது வாய்த்தகராறு ஏற்பட்டாலே பிரேக்கப் ச... மேலும் பார்க்க