செய்திகள் :

Good Bad Ugly: `மார்ச் 18-ல் ஓஜி மாமே!' - படக்குழு கொடுத்த அதிகாரப்பூர்வமான முதல் சிங்கிள் அப்டேட்!

post image

அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அஜித்துடன் நடிகர் சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். `விடாமுயற்சி' திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். 5-வது முறையாக அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் இந்த `குட் பேட் அக்லி'.

Good Bad Ugly First Single

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்தின் முதல் சிங்கிள் குறித்தான அப்டேட்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் கொடுத்து வந்தார். தற்போது படக்குழுவே படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது. `ஓ.ஜி மாமே' என்ற இப்படத்தின் முதல் பாடல் வருகிற மார்ச் 18-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் உருவான விதத்தை ஒரு காணொளியாக வெளியிட்டு அந்த காணொளியின் மூலம் இந்த தகவலை அறிவித்திருக்கிறார்கள்.

Lokesh Kanagaraj: `உங்களின் நுண்ணறிவும், கதை சொல்லல் பேரார்வமும்' - `கூலி' படத்தில் ஆமீர் கான்?

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு 60-வது பிறந்தநாள் இன்று. இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இன்று பிறந்தநாள். அவர் இயக்கி வரும் `கூலி' திரைப்படத்தில் ரஜினி, நாகர்ஜூனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா, ... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: "அப்போதான் LCU முடிவுக்கு வரும்" - லோகேஷ் கனகராஜின் லைன் அப் இதான்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் இன்று! கோலிவுட்டின் தற்போதைய `மோஸ்ட் வான்டென்ட்' டைரக்டர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். இவருக்கு அதிகப்படியான ரசிகர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பி... மேலும் பார்க்க

Kayadu Lohar: 'முதல்ல கீர்த்தி கேரக்டர்-லதான் நடிக்க சொன்னாங்க, ஆனா..'- டிராகன் குறித்து கயாடு லோஹர்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கயாடு லோஹர் அஸ்வத் மாரிமுத்துவி... மேலும் பார்க்க