செய்திகள் :

GVM 25: "எனக்கு கிடைச்ச அன்புக்கும், மரியாதைக்கும் 'காக்க காக்க' படமும் ஒரு காரணம்"- நெகிழும் சூர்யா

post image

'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன்

இதனைக் கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி இருந்தன.

குறிப்பாக சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து 'வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற 'அஞ்சல' பாடலுக்கு நடனம் ஆடியிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி மேடையில் கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா பேசியிருக்கிறார்.

"இவர்கள் (இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்) எல்லாம் பிரம்மாக்கள் . இவர்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை. உங்களுடைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

சூர்யா
சூர்யா

எனக்கு கிடைத்த அன்பும், மரியாதையும் உச்சத்திற்குப் போனதற்கு 'காக்க காக்க' படமும் ஒரு காரணம். அதே அன்பையும் மரியாதையையும் இப்போது வரைக்கும் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய ரசிகர்களுக்கு தலை வணங்குகிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

"தென்னிந்தியர் என்பதால் என்னைக் கிண்டலடித்தார்கள்" - பாலிவுட் பாகுபாடு குறித்து ரெஜினா கசாண்ட்ரா

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் 'Hindustan Times' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்... மேலும் பார்க்க

மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே உறவினர் - முழு தகவல்!

இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை படங்களில் தயாரிப்பிலும் காட்டி வருகிறார். தன்னிடம் விஜய் டிவி காலங்களில் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கு உதவும் விதமாகவும் அந்த... மேலும் பார்க்க

டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்' கிளைமாக்ஸ்! - அப்டேட்!

கார்த்தியின் 'மார்ஷல்' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. 'வா வாத்தியார்' படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக 'சர்தார் 2' ரெடியாக... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திரைக்கு வந்த மற்றும் வரவிருக்கும் ரீ ரிலீஸ் படங்களின் புகைப்பட தொகுப்பு!| Photo Album

‘கில்லி’ From Feb 20‘துணிவு’ From Feb 20‘சூது கவ்வும்’ From Feb 20‘தெறி’ From Feb 27‘அமைதிப்படை’ Upcoming‘தம்பி’ Upcoming‘உயிருள்ளவரை உஷா’ Released‘மௌனம் பேசியதே’ Released‘மின்னலே’ Released‘காதலர் தின... மேலும் பார்க்க

Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா - நெகிழ்ச்சியில் ரியா

'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மா... மேலும் பார்க்க