அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாக...
Ind v Aus: "இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது"- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி
கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்தினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஷா ஹீலி தோல்வி குறித்து பேசுயிருக்கிறார்.
"நான் நன்றாக இருக்கிறேன் என்று பொய் சொல்ல மாட்டேன். அந்தத் தோல்வி இன்னும் வலிக்கிறது.
ஏழு வாரங்கள் நீடித்த ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தில் நாங்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட்டை தான் நாங்கள் விளையாடினோம்.
இந்திய அணி அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
நாங்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடுகிறோம், மற்ற அணிகள் எங்களைத் தோற்கடிக்க தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

இந்தியா கோப்பையை வென்றது உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லது. இது ஒரு அற்புதமான அனுபவம்.
ஆனால் தனிப்பட்ட முறையில், இந்தத் தோல்வி என்னைச் சிறிது காலத்திற்குத் துரத்தும்" என்று பேசியிருக்கிறார்.
















