H-1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் ம...
IND vs SA: ``பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன், இந்தப் போட்டியில நாங்க கொஞ்சம்.!'' - கே.எல் ராகுல்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ.30) ராஞ்சியில் நடைபெற்றது.

இதில், 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கே.எல் ராகுல், "இந்தப் போட்டியில் எங்களுக்கு பதற்றம் இல்லை என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும்.
மீண்டும் நாட்டிற்காக கேப்டன் பொறுப்பேற்றுள்ளேன் என்பதால் என் மீது எனக்கே எதிர்பார்புகள் எழுந்துள்ளன. தென்னாப்பிரிக்க வீரர்கள் எங்களை கடைசி எல்லை வரைக்குமே தள்ளினார்கள்.
அது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. அணிக்கு திரும்பிய ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவதைப் பார்க்கும் போதே ஜாலியாக இருக்கும். நான் நீண்ட காலமாக இதனைப் பார்த்து வருகிறேன்.
அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. அதேபோல ஹர்ஷித் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தபோதே அவர் ஒரு ஸ்பெஷலான வீரர் என்று எனக்குத் தெரியும். இந்திய அணி நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த வீரர் இவர்தான்.
அவர் இன்னும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், அவரிடம் நிறையத் திறமை இருக்கிறது.
கடந்த 2-3 தொடர்களாக எனக்கு வழங்கப்பட்ட பணியை நான் செய்து வருகிறேன். அணியின் வெற்றிக்காக விளையாடுவது எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நல்லது என்று நினைக்கிறேன்" என கே.எல் ராகுல் பேசியிருக்கிறார்.


.jpg)













