செய்திகள் :

Indigo Cancelled : 'அவதியுறும் பயணிகள்; அவஸ்தைப்படும் ஊழியர்கள்' - சென்னை விமான நிலைய ஸ்பாட் விசிட்

post image

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.

நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படிருக்கின்றன.

இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இண்டிகோ
இண்டிகோ

சிவில் விமான போக்குவரத்து துறை கொண்டு வந்த DGCA விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால் தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.

இண்டிகோ நிறுவனம் நாளுக்கு நாள் சரிவை நோக்கி நகரும் சூழலில் லட்சக்கணக்கான விமானப் பயணிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையம் ஸ்பாட் விசிட்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள கள ஆய்வு செய்திருந்தோம்.

உள்ளே போக முடியாது, போனால் வெளியே வரவும் முடியாது! இப்போதைக்கு இதுதான் சென்னை விமான நிலையத்தின் நிலைமையாக இருக்கிறது.

பல மணி நேரங்களாக ஏன் சில நாட்களாக கூட சென்னை விமான நிலையத்துக்குள் சிக்கி அவஸ்தைப் படுகிறார்கள் பொதுமக்கள்.

சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்
சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்

அவதியுறும் பயணிகள்

சிங்கப்பூரிலிருந்து கனெக்டிங் பிளைட் மூலம் தனது சொந்த ஊருக்கு திரும்ப வந்த ஒரு பெண் தனது குடும்பத்துடன் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்.

சபரிமலைக்கு விமானம் மூலம் முன்பதிவு செய்ய இருந்த பக்தர்கள் அனைவரும் இப்பொழுது சபரிமலை செல்ல முடியாமல் தவித்துக் கிடக்கிறார்கள்.

பொதுமக்களின் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் கைவிரிக்க கிரவுண்ட் ஸ்டாஃப்கள் எனப்படும் உள்நிலை ஊழியர்கள் பொதுமக்களிடம் சிக்கி அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

குவிக்கப்பட்ட CRPF வீரர்கள்

விமான நிலையத்துக்கு உள்ளேயே நாள் கணக்கில் சிக்கித் தவிப்பவர்கள் உள்ளே உணவில்லாமல் அதிகபட்ச விலைக்கு உணவுப் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் இப்பொழுது கூச்சலும் சண்டையுமாக இருக்கும் இந்த நிலையில் CRPF வீரர்களும் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்
சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்

இன்னும் இந்த பிரச்சனை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை.

இண்டிகோ நிறுவனம் விரைந்து இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.!

`பைலட் பணி நேரம் குறைப்பு' - அரசின் புதிய விதி; 800 இண்டிகோ விமானங்கள் ரத்து - பயணிகள்அவதி

நாட்டின் மிகப்பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமாக கருதப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளால், இண்டிகோவின் வி... மேலும் பார்க்க

``சக ஊழியர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேன்'' - அபுதாபியில் ரூ.60 கோடி லாட்டரி வென்ற கேரள அதிர்ஷ்டசாலி

அபுதாபியில் நடைபெறும் பிரபலமான ‘பிக் டிக்கெட்’ டிராவில், கேரளாவைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 60 கோடி) பரிசை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ராஜன் என்ற 52 வயது நப... மேலும் பார்க்க

``இந்த ஆடையை உங்க மனைவிகிட்ட கொடுங்க, அவங்களுக்கு தெரியும்'' - சர்ச்சையை கிளப்பிய ஆடை நிறுவனம்

சீனாவைச் சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்று, தங்கள் தயாரிப்பில் இடம்பெற்ற வாசகத்திற்காக கடும் விமர்சனத்திற்குப் பாயப்பட்டுள்ளது."துணி துவைப்பது பெண்களுக்கான வேலை" என்ற தொனியில் அந்த நிறுவனம் கூறி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்த பாம்பு; CPR கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில்... மேலும் பார்க்க

AI Video: 90 வயது தாத்தாவுக்கு பேரன் கொடுத்த AI Gift; கண்கலங்கிய குடும்பம்; வைரலான வீடியோ!

90வது வயதை எட்டியுள்ள தனது தாத்தாவுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது பேரன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தொழில்நுட்ப உலகில் 'செயற்கை நுண்ணறிவு' பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி... மேலும் பார்க்க

நாகாலாந்து: 'வெட்டுக்கிளி, பட்டுப்புழு, பூனை' - திகைத்த சுற்றுலாப் பயணி; வைரலான உணவுப் பட்டியல்

நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழா இப்போது தொடங்கி நடந்து வருகிறது. விழாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்க... மேலும் பார்க்க