BB Tamil 9: "இப்போ எனக்கு எல்லாம் புரியுது" - அரோராவின் காலில் விழுந்த கம்ருதீன்
Indigo: "மத்திய அரசின் அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்" - ராகுல் காந்தி
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை கொண்டு வந்த DGCA விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.
நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மத்திய அரசின் தனி அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்.

விமான தாமதங்கள், சேவை ரத்துகளால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் 'மேட்ச் ஃபிக்சிங்' செய்யாமல் நியாயமான போட்டிகள் நடைபெற வேண்டும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார்.
















