செய்திகள் :

அதிமுக: "தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை" - ஓ.பன்னீர்செல்வம்

post image

நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ.க-விடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்தது.

குறிப்பாக, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரியும், ஓ.பி.எஸுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த அதிருப்தியால் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய ஓ.பி.எஸ், 'வரும் 15-ம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார். இதனிடையே பா.ஜ.க-வின் அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது.

Ahmedabad Plane Crash - அமித் ஷா
Ahmedabad Plane Crash - அமித் ஷா

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. மேலும் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பி.எஸ், பாஜகவைச் சேர்ந்த மற்ற தலைவர்களைச் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், சென்னை வந்த அவர், ``தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன்" என்றார்.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இயக்கத்தை, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்தி நிலை நிறுத்தினார்கள்.

அந்த நிலை மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதுதான் கழகத்தின் அடிப்படை தொண்டர்களின் எண்ணம் என்பதை டெல்லியில் தெரிவித்திருக்கிறேன்.

நான் எந்தச் சூழலிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை. தவெக-வில் இணைந்திருக்கும் செங்கோட்டையனை நானும் தொடர்புகொள்ளவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

என்னுடைய அடுத்தக்கட்ட நகர்வு தமிழக மக்கள், கழகத் தொண்டர்கள் எண்ணப்படி இருக்கும். தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. இன்னும் ஆறு மாதம் இருக்கிறது, பொறுமையாகப் பேசலாம்.

அதிமுக-விலிருந்து பலர் கட்சி மாறுகிறார்கள் என்றால், இது ஜனநாயக நாடு யார் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், அதிமுக தொண்டர்களின் பலம் எந்தச் சூழலிலும் பழுதுபடாது.

அதிமுக எத்தனையாகப் பிரிந்திருந்தாலும் எங்கள் நோக்கமும், கொள்கையும் ஒன்றுதான். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுசேர வேண்டும் என்றுதான் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்" எனப் பேசியிருக்கிறார்.

Indigo: "மத்திய அரசின் அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்" - ராகுல் காந்தி

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.நவம்பர் மாதத்தில் மட்டும் மொத... மேலும் பார்க்க

'இதுதான் திராவிட மாடலா?' - தலைமைச் செயலகம் நோக்கி தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை

சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று குறளகம் அருகே இருந... மேலும் பார்க்க

கொங்கு அரசியலில் பரபரப்பு: திமுக அமைச்சரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி! - காரணம் என்ன?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொங்கு திருப்பதி கோவில் அமைந்துள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட கோவில் அப்புறப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. இதனால... மேலும் பார்க்க

`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிய... மேலும் பார்க்க

``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..?" - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்ச... மேலும் பார்க்க