செய்திகள் :

Kayadu Lohar: ``என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” - நடிகை கயாடு லோஹர் வேதனை

post image

2021ம் ஆண்டு வெளியான 'முகில்பேட்டே' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர்.

அதன் பிறகு 'பதோன்பதம் நூட்டாண்டு' என்ற மலையாள படத்திலும், 'அல்லூரி' என்ற தெலுங்கு படத்திலும், 'ஐ பிரேம் யு' என்ற மராத்தி படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ’டிராகன்’ படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

Kayadu Lohar
Kayadu Lohar

அந்த சமயத்தில் கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருந்தார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தன.

மறுபுறம் தனக்கு தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரொமோட் செய்துகொள்கிறார் கயடு லோஹர் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அவரிடம் தன் மீது எழும் விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “சோஷியல் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது.

Kayadu Lohar
Kayadu Lohar

ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான், எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் சிலர் டார்கெட் செய்கிறார்கள்?

பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஆழ் மனதில் அது உறுத்திக் கொண்டே இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

Friends: `இந்தப் படத்தில் ஹீரோ யார் என்றே தெரியாது!’ - இயக்குநர் பேரரசு

இயக்குநர் சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இந்தப்படம் வரும் நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில... மேலும் பார்க்க

"உங்க லாயல்டிக்கு ஒரு சின்ன கிஃப்ட்"- இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் 'கோமாளி' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்... மேலும் பார்க்க

"`சாவா' பிரசார படம்னு தெரியும்; அதான் நடிக்கல" - 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்த கிஷோர்

ஹீரோ, வில்லன், நேர்மறையான விஷயங்களை நிகழ்த்தக்கூடிய குணச்சித்திர கதாபாத்திரங்கள் என அனைத்திற்கும் சரியாகப் பொருந்திப்போகக்கூடியவர் நடிகர் கிஷோர். தனக்குக் கொடுக்கப்படும் அத்தனை கதாபாத்திரங்களையும் பக்... மேலும் பார்க்க

Bose Venkat: ``நான் அப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்'' - தன் ஆசான் குறித்து மனம் திறந்த போஸ் வெங்கட்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் அவருக்கு நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெ... மேலும் பார்க்க

Friends : `அஜித், சினிமால இருக்கற யாரையும் லவ் பண்ணிடாத, புரியுதா?’ - ரமேஷ் கண்ணா செய்த கலாட்டா!

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ். இந்தப்படம் வருகின்ற நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில் மீண்டும் வெளியாகிறது.இந்த பட... மேலும் பார்க்க