செய்திகள் :

Maldives: 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் மாலத்தீவில் புகைப்பிடிக்க தடை; மீறினால்?

post image

2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், மாலத்தீவில் கண்டிப்பாக புகைப்பொருள்களைப் பயன்படுத்தவே கூடாது என்கிற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது அந்த நாட்டு அரசு.

என்ன அறிவிப்பு?

இந்த அறிவிப்பு Tobacco Control Act-ன் இரண்டாவது திருத்தம் என்று அழைக்கப்படுகிறது.

மாலத்தீவு நாட்டின் அதிபர் முகமது முய்சு, "புதிய சட்டத்தின் படி, 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் புகைப்பொருள்களை வாங்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ முற்றிலும் தடை" என்று அறிவித்துள்ளார்.

மாலத்தீவு
மாலத்தீவு

இந்தச் சட்டம் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டம் சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும். இவர்களிடம் அடையாளச் சான்றுகள் சரிபார்க்கப்படும்.

இதை மீறினால் 10,000 – 50,000 ரூபியோக்கள் (இந்திய ரூபாயில் ரூ.54,000 - 2,70,000) விதிக்கப்படும்.

ஏன் இந்தச் சட்டம்?

மாலத்தீவு அரசு எதிர்காலத் தலைமுறையினரை முழுமையாக புகைப்பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்தப் புதிய சட்டத் திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.

வேறு என்ன தடை?

அங்கே எல்லா வயதினருக்கும் இ-சிகரெட்டுகள், வேப்பிங் சாதனங்கள் மற்றும் புகைப்பொருள் சார்ந்த அனைத்து சாதனங்களுக்கும் தடை. புகைப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள், இறக்குமதி, உற்பத்தி, இயந்திரங்கள் முற்றிலும் தடை. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் - அபராதம் மற்றும் சிறைத்தண்டனை - வழங்கப்படும்.

மாலத்தீவு ரூஃபியா
மாலத்தீவு ரூஃபியா

இதற்கு முன்பு...

அந்த நாட்டு அரசு அறிக்கையின் படி, ஆண்டுக்கு 240-க்கும் மேற்பட்டோர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். இதை குறைக்கவே இந்த நடவடிக்கை.

இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு 2009-ம் ஆண்டுக்கு பிறகு, பிறந்தவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின், 2023-ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் வரி இழப்பு காரணமாக அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

AI துறைகளில் கடும் போட்டி; சீனாவில் இளம் விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த மரணங்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

சீனாவில் இளம் விஞ்ஞானிகளின் மரணங்களைச் சார்ந்த புதிய புள்ளிவிவரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.CSND என்ற ஆன்லைன் தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 60 வயதுக்குட்பட்ட 76 ஆராய... மேலும் பார்க்க

குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? உண்மை என்ன?

ஃபிரிட்ஜை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் காந்தங்களால் (Fridge Magnets) மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதாக ஒரு விஷயம் பரவி வருகிறது. இந்த வதந்தியின் உண்மைத்தன்மை என்ன? நிபுணர்கள் கூறுவது என்ன? என்பது குறித... மேலும் பார்க்க

போனில் `ஹலோ' சொல்ல மறுக்கும் ஜென் Z தலைமுறையினர்; காரணம் என்ன? - விளக்கும் கம்யூனிகேஷன் ரிசர்ச்

‘ஜென் Z’ இளைஞர்களின் தொடர்பு பழக்கத்தில் ஒரு புதிய மாற்றம் கவனத்துக்கு வருகிறது. தொலைபேசி அழைப்பு வந்தால் ‘ஹலோ’ என்று வழக்கமாக சொல்லும் சொல்லை சொல்லாமல் உரையாடலைத் தொடங்குவது ஒரு வழக்கமாகி வருகிறது.Ge... மேலும் பார்க்க

தாஜ் உணவகம்: 'நான் சம்மணங்கால் போட்டு அமர்வது உங்களுக்கு பிரச்னையா?' - ஷ்ரதா பதிவு

'யுவர் ஸ்டோரி' என்னும் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் ஷ்ரதா. இவர் தீபாவளியை முன்னிட்டு தன்னுடைய சகோதரியுடன் டெல்லி தாஜ் ஹோட்டலில் உள்ள ஹவுஸ் ஆஃப் மிங் உணவகத்திற்கு சென்றிருக்கிறார்.அங்கே அவர் சம்மணங்கால... மேலும் பார்க்க

விலங்குகளுக்கான தீபாவளி எப்படி இருக்கும்? நாம் என்ன செய்யலாம்?

ஒளி, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் திருவிழாவான தீபாவளி, மனிதர்களுக்குப் பிரகாசமான நினைவுகளைத் தந்தாலும், விலங்குகளுக்கு இது பெரும்பாலும் பயம் மற்றும் துன்பத்தின் காலமாகவே இருக்கிறது. பட்டாசுகளின் ... மேலும் பார்க்க

ஆர்ஜே தீபக்கின் தொப்பி பட்டாசு, அனிதா சம்பத்தின் ஆடம்பர ஆட்டோ, தீபாவின் குவா குவா - தீபாவளி மெமரீஸ்!

பண்டிகைகளோட ஹைலைட்ஸ்ல ஒண்ணு, சந்தோஷ நினைவுகளை உருவாக்குறது. அப்படி, சில செலிப்ரிட்டீஸ்கிட்ட அவங்களோட ஹேப்பி தீபாவளி மெமரீஸ் கேட்டோம்...ஆர். ஜே தீபக்"எனக்குப் பட்டாசு போட ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க ... மேலும் பார்க்க