செய்திகள் :

Petrol Price Hike: நாடு முழுவதும் உயர்ந்த பெட்ரோல், டீசல், CNG விலை; சாமானிய மக்கள் கலவை

post image

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.

இதன் நேரடி விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன.

இந்த விலை உயர்வு இன்று (15-ம் தேதி, வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அதிரடி மாற்றத்திற்குப் பிறகு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 97.77-க்கும், டீசல் ரூ. 90.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல்
பெட்ரோல்

சென்னையைப் பொறுத்தவரை, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 103.98-ஆகவும், டீசல் விலை ரூ. 95.50-ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மும்பையில் பெட்ரோல் ரூ. 106.68-க்கும், கொல்கத்தாவில் ரூ. 108.74-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற பெருநகரங்களிலும் அந்தந்த மாநில வரிகளுக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ. 2.83 முதல் ரூ. 3.29 வரை விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய இறக்குமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 69 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், மேற்கு ஆசிய மோதலால் தற்போது அது 113 முதல் 114 டாலர் வரை எகிறியுள்ளது.

இந்த விலை ஏற்றத்தினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையின் ஒரு பகுதியை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 3 உயர்வு ஈடுசெய்யும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ரூ. 2 விலை குறைப்பைத் தவிர, எரிபொருள் விலையில் பெரிய மாற்றங்கள் எதையும் மத்திய அரசு செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை உயரக்கூடும் என்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால், டெல்லி, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நேற்றிரவு முதல் வரத் தொடங்கினர்.

CNG Baleno
CNG Baleno

விலை உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தங்கள் வாகனங்களுக்கு முழுமையாக எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் முண்டியடித்ததால் பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 105 டாலருக்கு மேல் நீடிப்பதாலும், போர் சூழல் தணியாததாலும் வரும் நாட்களில் மேலும் விலை உயர்வு இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, சர்வதேச நெருக்கடி காரணமாக CNG விலையும் கிலோவிற்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த அதிரடி மாற்றத்தால் டெல்லியில் ஒரு கிலோ CNG விலை ரூ. 79.09-ஆகவும், மும்பையில் ரூ. 84-ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆட்டோக்கள், டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் எனப் பெரும்பாலான பொதுப் போக்குவரத்து வாகனங்கள் CNG-யை நம்பியே இயங்குவதால், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் தினசரி பயணச் செலவை நேரடியாகப் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இது நுகர்வோர் மற்றும் போக்குவரத்துத் துறையினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேரடியாக விலைவாசி உயர்வில் எதிரொலிக்கும் என்பதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

சென்னை: ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | News Today live update

CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்வு!AG&Pratham CNG Stationபெட்ரோல், டீசலைத் தொடர்ந்து CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் இந்த விலை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: எரிபொருள் செலவைக் குறைக்கச் சொன்ன பிரதமர்; தலைமை செயலகத்திற்கு பைக்கில் வரும் முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படியும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் படியும், வீட்டில... மேலும் பார்க்க

TVK: சேலத்தில் நடைமுறைக்கு வந்தது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை; பணிகள் என்ன?

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவைத் தொடங்க உத்தரவிட்டிருந்தார... மேலும் பார்க்க

15%-ஆக உயர்ந்தது: தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வரி அதிகரிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தும்படியும், எரிபொருள், உணவு ஆயில்களை பயன்படுத்துவதை குறைக்கும்படியும், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும்படியும், வீட்டில் இருந்து வேலை செய்ய... மேலும் பார்க்க

இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய 'நோ'- மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

தற்காலிகமாக இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம். அமைச்சகம் என்ன சொல்கிறது? வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை (ரா ச... மேலும் பார்க்க

நிழல் உலகின் பிடியில் NEET: கனவுகளைத் திருடிய வினாத்தாள் கசிவு; நீட் முறைகேட்டின் விரிவான பின்னணி!

கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட்-யூஜி (NEET-UG 2026) தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் கசிந்தது பின்புதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து... மேலும் பார்க்க