OPS-க்கு, Amit shah தந்த உத்தரவாதம், பின்னணியில் TVK ரோல்? | Elangovan Explains
Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியதால் கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழந்து, குறைந்த அழுத்த பகுதியாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை 05-12-2025ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்படுகிறது.

இதுதவிர இன்று காலை வெளியான வானிலை அறிக்கையின்படி, "இன்று இடியுடன் கூடிய கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும்.
மிதமான மழை விழுப்புரம், கடலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
பருவமழை டிசம்பர் 9 அல்லது 10ஆம் தேதிகளில் அடுத்த மழையைக் கொண்டுவரும்" என்று கூறப்பட்டிருக்கிறது.















