செய்திகள் :

திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!

post image

'எல்லாம் என் தலையெழுத்து' என்று பலரும் கஷ்ட காலத்தில் புலம்புவதைக் கேட்டிருப்போம். பிரம்மன் எழுதிய எழுத்தின்படிதான் நம் வாழ்க்கை நடக்கிறது என்பதுதான் ஆழ்ந்த நம்பிக்கை. அந்தத் தலையெழுத்தை மாற்றவேமுடியாதா என்று தவிப்பவர்களுக்காகவே அமைந்திருக்கிறது ஓர் அற்புதத் தலம்.

திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ளது திருப்பட்டூர். இந்தத் தலத்தில்தான் தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

தன் ஆணவத்தால் பதவியை இழந்த பிரம்மன் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு மீண்டும் பதவியைப் பெற்ற தலம் என்கிறது தலபுராணம்.

இங்கே 12 சிவலிங்கங்கள் அமைத்து ஈசனை பூஜித்து பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களையும் தரிசனம் செய்கிறார்களோ அவர்களின் தலையெழுத்தை நல்லபடியாக மாற்றித் தருவதாக பிரம்மன் கூறியிருக்கிறார் என்கிறார்கள்.

ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஈசனும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகிறார். சுவாமிக்கு இடப்பக்கத்தில் கிழக்குப் பார்த்தபடி அருள்புரிகிறாள் ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி.

ஈசனுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளியதால், பிரம்ம சம்பத் கௌரி என்கிற திருநாமம் அம்பிகைக்கு உண்டானதாம். ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி, புடவை சாத்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும்; தாம்பத்திய வாழ்க்கை வளம் பெறும்! பங்குனி மாதத்தில் மூன்று நாள்கள், ஈசனின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப்பாதங்களிலும் விழுவது அதிசயம். காசிக்கு நிகரான திருக்கோயில் இது என்று போற்றப்படுகிறது.

மேலும் பிரம்மபுரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திரநாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திருமேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரின் வலப்பக்கப் பிராகாரத்தில் அமைந்திருக்கிறது பிரம்மனின் சந்நிதி. மேலும் இங்கு பிரம்மாவின் சந்நிதிக்கு நேராக நின்று பிரம்மாவையும் தரிசிக்கலாம், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

ஈசனின் திருநடனத்தை தரிசிக்க விரும்பிய வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் ஈசனின் ஆணைப்படி நவபுலியூருக்கும் சென்று தாண்டவ தரிசனம் கொண்டார்களாம். இறுதியில் திருப்பட்டூருக்கு வந்து ஈசனைத் தியானித்து இங்கே ஜீவசமாதி அடைந்தனர்.

இன்றும் திருப்பட்டூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் உள்ளதைக் காணலாம். இங்கு தியானித்தால் எண்ணியது கூடுமாம்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

தலையெழுத்தை மாற்றும் பிரம்ம வழிபாடு

இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, அம்பிகைக்குப் புடவை சாத்தி, பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு செய்து, பிராகார வலம் வந்து மனமுருகி வேண்டிக்கொண்டால், நிச்சயம் நம் தலையெழுத்து மாறும் என்கின்றன புராணங்கள்.

தலையெழுத்தை மாற்ற பரிகாரம் செய்பவர்களிடம் அபிஷேகம் மற்றும் மஞ்சள் காப்பு சாத்த 3,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்வார்கள். தங்களால் இயன்ற பக்தர்கள் மஞ்சள் காப்பு சாத்தி வழிபடலாம்.

இயலாதவர்கள் மஞ்சள் வாங்கி கோயிலில் சமர்ப்பித்தால் அதை மஞ்சள் காப்பில் சேர்த்துவிடுவார்கள். இதற்கும் மிகுதியான பலன் உண்டு. திங்கள், வியாழக் கிழமைகளிலும் நட்சத்திரங்கள்: திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களும் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்துவது மிகவும் விசேஷம்.

இங்குள்ள முருகப்பெருமான் சந்நிதியில் முருகனின் வாகனம், அசுர மயிலாக இடம் மாறிக் காட்சி தருகிற கோலத்துடன் முருகப்பெருமானை தரிசிப்பது சிறப்பு. கந்தனின் பூஜையில் மகிழ்ந்த ஈசன், அவருக்குத் திருக்காட்சி தந்து, ‘வெற்றி உனக்கே!’ என அருளிய தலம் இது. இங்கே, ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதிக்கு அருகில், ஸ்ரீகந்தபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார்.

பொதுவாக, கோயிலின் வடகிழக்கு மூலையில், தெற்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீகாலபைரவர், இங்கே மேற்கு நோக்கிய நிலையில் தரிசனம் தருகிறார். இவரின் வலது செவியும், அதில் இருக்கிற தாடங்கமும் சற்றே வித்தியாசமாக இருப்பதைக் காணலாம்.

தேய்பிறை அஷ்டமியின் ராகுகால வேளையில் வந்து, காலபைரவரை வணங்கி, அவரிடம் கோரிக்கைகளை வைத்தால், வழக்குகளில் இருந்தும் பிரச்னைகளில் இருந்தும் விரைவில் நிவாரணம் பெறலாம்; இழந்த பொருள், இழந்த பதவி, இழந்த செல்வம், இழந்த கௌரவம் ஆகியவற்றை மீட்டுத் தந்தருள்வார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அழகிய தீர்த்தத்தில் கூறும் நீர் நன்னீராக விளங்குகிறது. ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே பகுள தீர்த்தம் அமைந்துள்ளது.

திருப்பட்டூருக்கு மற்றொரு பெருமை மாசாத்தனார் எனப்படும் ஸ்ரீஐயனார் கோயில். இங்குள்ளவர் அரங்கேற்ற ஐயனார் எனப்படுகிறார். ஐயனார் வடிவங்களில் இவர் மிக மிகத் தொன்மையானவர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சேரமான் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலாவை திருப்பட்டூருக்குக் கொண்டு வந்து அரங்கேற்றியவர் இவர். இதனால் இங்கு சுந்தரருக்கும் சேரமான் நாயனாருக்கும் குருபூஜைத் திருவிழா ஆடி சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருத்தலத்துக்கு வந்தாலே வாழ்க்கை மாறும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை திருப்பட்டூருக்கு வந்து செல்லுங்கள். வாழ்க்கை வளமாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.

கும்பகோணம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயில்: மன்னர் ராஜராஜனின் குலதெய்வக் கோயில் இதுதான்!

திருவலஞ்சுழிநாதர்காவிரி நதியின் கரையில் பல்வேறு தேவாரத் தலங்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்புவாய்ந்தவை. காவிரியாலேயே பெயர்பெற்றதும், காவிரிநதி தோன்றியது குறித்த சரிதத்தை உடையதுமான திருத்தல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம், இளையனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்: பங்குனியிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் தலம்!

முருகப்பெருமான் ஆலயங்களில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது ஆறாம்நாள் சஷ்டி திதி அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். அதேபோன்று பங்குனி மாதத்திலும் சூரசம்ஹாரம் நடைபெறும் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா –பக்தர்கள் சாமி தரிசனம்

குடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஸ்ரீசீனிவாச பெருமாள்: திருமணம் நடக்க வழிபடுங்கள்; வியக்கும் பக்தர்கள்

நம் பாரத தேசம் முழுமையும் விஷ்ணு ஆலயங்கள் பல உள்ளன. பழைமைவாய்ந்த ஆலயங்கள் பல இருந்தாலும் பல புதிய ஆலயங்களும் தோன்றி பக்தியை வளர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுக... மேலும் பார்க்க

திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

தேவர்களும் முனிவர்களும் ஏன் மகாவிஷ்ணுவும் பிரம்மனும் காணவிரும்புவது ஈசனின் நடனக் காட்சி. அப்படிப்பட்ட அந்த அற்புதமான காட்சியை ஈசனும் அவரை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு காட்டி அருளினார். அப்படி அவர் தி... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி!

பெருமாள் வரதராஜராக அருள்பாலிக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் குறையாத செல்வம் அருளும் பெருமாளாக அட்சய வரதராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆட்சிப்பாக்கம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து ஆவணி... மேலும் பார்க்க