செய்திகள் :

"Raja Shivaji படத்தில் நடிக்க நான், அமிதாப், சல்மான் சம்பளம் வாங்கவில்லை" - ரிதேஷ் நெகிழ்ச்சி

post image

மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜா சிவாஜி என்ற பெயரில் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் புதிய படம் ஒன்றைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் சல்மான் கான், அபிஷேக் பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் கெளரவ வேடத்தில் நடித்துக்கொடுத்துள்ளனர். நடிகர் சஞ்சய் தத் அப்ஷல்கானாக நடித்து இருக்கிறார்.

ராஜா சிவாஜி
ராஜா சிவாஜி

இதில் ரிதேஷ் தேஷ்முக் மனைவி ஜெனிலியா தேஷ்முக் ராஜா சிவாஜியின் மனைவியாக நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்து கொடுத்தது குறித்து ரிதேஷ் தேஷ்முக் அளித்த பேட்டியில், ''ராஜா சிவாஜியின் ஒரு பகுதியாக இருக்கும் சல்மான் கான் மற்றும் அபிஷேக் பச்சனுடனான எனது நட்பு காரணமாக அவர்கள் இப்படத்தில் இணைய நேர்ந்தது.

சில உறவுகள் முற்றிலும் அன்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. நடிகர் சல்மான் கான், அபிஷேக் பச்சன், வித்யா பாலன், ஃபர்தீன் கான், போமன் இரானி, ஜெனிலியா தேஷ்முக் மற்றும் நான் இப்படத்தில் நடிக்க சம்பளம் வாங்கவில்லை.

நாங்கள் அனைவரும் இந்தப் படம் இன்று இருக்க வேண்டும் என்பதற்காக முழுமையாக உழைத்தோம். இது ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நிபந்தனையற்ற சொல்லப்படாத அன்பும் மரியாதையும் ஆகும். நான் 23 ஆண்டுகளில் சம்பாதித்தது இதுதான்.

அவர்கள் அனைவருக்கும் நான் உண்மையிலேயே கடமைப்பட்டு இருக்கிறேன். அபிஷேக் பச்சனை இப்படத்தில் நடிக்கும்படி அழைத்தபோது அவர் என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதோடு படத்தில் நடிக்க சம்பளம் குறித்து விவாதித்ததே இல்லை'' என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு ரிதேஷ் தேஷ்முக் அளித்திருந்த பேட்டியில், ''சல்மான் கான் என்னிடம் தனக்கு ராஜா சிவாஜியில் என்ன கதாபாத்திரம் என்று கேட்டதோடு தான் இல்லாமல் எப்படி என்று எனக்கு ஆச்சரியம் கொடுத்தார்'' என்றார்.

ரிதேஷ் தேஷ்முக்கும், சல்மான் கானும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். சல்மான் கான் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ரிதேஷ் தேஷ்முக் தம்பதி இல்லாமல் இருக்கமாட்டார்கள்.

படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்; வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்; ஆச்சரியத்தில் பாலிவுட்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் படம்... மேலும் பார்க்க

"3 வேளையும் பார்லே-ஜி பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்திருக்கிறேன்" - நவாசுதீன் சித்திக்

'கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பாலிவுட்டில் இன்று தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் 'ரேடியோ நாஷா' இதழுக்கு அளித்த பேட... மேலும் பார்க்க

Ek Din Review: ஒரு நாள் மெமரி லாஸ் காதல்! - படமாக நினைவில் தங்குகிறதா இந்த `ஏக் தின்'?

கதாநாயகன் தினேஷும் (ஜுனைத் கான்), நாயகி மீரா ரங்கநாதனும் (சாய் பல்லவி) ஒரே ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். மீராவை ஒருதலையாக காதலிக்கிறார் தினேஷ். அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ஜப்பானுக்கு டூர்... மேலும் பார்க்க

`கெளரி வந்தபிறகுதான் எனது வாழ்க்கை முழுமையடைந்தது' - லைஃப் பார்ட்னர் குறித்து நடிகர் ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு திருமணங்கள் செய்தார். ஆனால் இரண்டுமே நிலைத்திருக்கவில்லை. இரண்டு மனைவிகளையும் அவர் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களை விவாகரத்து செய்தாலும் தனது வீட்டிற்கு அருகேயே கு... மேலும் பார்க்க

'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?

'3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், ஆமீர் கான் மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்... மேலும் பார்க்க

Ek Din: "சாய் பல்லவிதான் இந்த நாட்டின் சிறந்த நடிகை!" - ஆமீர் கான் புகழாரம்

ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான் நடிகராக அறிமுகமாகும் 'ஏக் தின்' (Ek Din) படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. Ek Din Movieஇத்திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிக... மேலும் பார்க்க